Tuesday, March 26, 2013

தவக்காலச் சிந்தனை - 2013

 வளங்குபவர் : ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

13.02.2013
உறவின் உயிர்ப்பின் தளிர் நம்மிலே புதிய தசாப்தத்தை தர இத்தவக்காலத்தை பயன்படுத்துவோம்.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.


உலகமயமாக்கலின் உன்னத வளர்ச்சி இன்று உலகத்தை ஊசலாடவைத்துக் கொண்டிருக்கின்றது என்பது யாரும் உருக்குலைத்துவிட முடியாத உண்மையே. இத்தருணத்தில் அண்டவெளியை நோக்கிய பயணங்கள் ஆங்கங்கே அரங்கேறியும் வருகின்றன. இந்த நிகழ்கால செயல்பாடுகள் வானமும் பூமியும் ஆழிந்தாலும் என் வார்தையே அழியாது என்ற  ஆண்டவரின் அருள் வாக்கையே ஆட்டம் காண வைக்கிறன. இக்காலத்தில் நான் உலகம் முடியும் காலம் வரை என்றும் உங்களோடு இருக்கின்றேன் என்று கூறிய இறைவனை தேடி அவரை நோக்கி கூடி ஒடவேண்டும் என்று நற்செய்தி நானிலமெக்கும் ஒலிக்காமலுமில்லை. இந்த வேளையில் கத்தோலிக்கர்கள் தவக்காலம் என்னும் காலத்திற்குள் இன்று நுழைகிறார்கள். திருவழிபாட்டு ஆண்டுச் சக்கரத்தில் தவக்காலம் அல்லது மனமாற்றத்தின் காலமும் ஒன்றாகும்.

தவக்காலம் என்றால் என்ன?

தவக்காலம் என்றால்: சுருங்கக்கூறின் எம் ஆன்மாவின் ஏற்றத்திற்காக ஆண்டவரால் வழங்கப்பட்ட அருமையான காலமேயாகும். இறைவிருப்பத்தை வாழ்வில் ஏற்று அதன் படி வாழ்ந்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாவதற்கான காலமே தவக்காலமாகும். நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை எம் ஆன்மீகத் தேடலை வழிப்படுத்தி வலுப்படுத்தி வழப்படுத்த வல்லதேவன் தரும் காலமே தவக்காலம் என்று உறுதியாகக் கூறலாம்.

தவக்காலத்தின் தொடக்க நாளான இப்புதனை திருநீற்று புதன் அல்லது சாம்பல் புதன் என்று கத்தோலிக்கர் அழைப்பர். இன்றைய தினம் திருப்பலிப் பூசையில் பங்கு கொள்பவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளம் இடப்படுகின்றது. நாம் மண்ணுக்குரியவர்கள் மண்ணுக்கே திரும்பவேண்டும் என்பதை நினைவுபடுத்ததுவதற்கே சிலுவை அடையாளம்  சாம்பலால் இடப்படுகின்றது. மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தும் ஓர் அடையாளமாகவும், அதே நேரம், நம்மில் தவம், தாழ்ச்சி உருவாக வேண்டிய ஓர் அழைப்பை திருநீற்றுபுதனும், அன்று நம்மீது பூசப்படும் சாம்பலும் நமக்குத் தருகின்றன.

தவக்காலம் எத்தனை நாட்கள் கொண்டது?

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய இத்தவக்காலப் பயணம் நாற்பது நாட்களை கொண்டது. ஆண்டவரின் நாள் என அழைக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து தவக்கலம் நாற்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நாட்களில் பாவத்திற்காக மனம் வருந்தல், மனமாற்றம் மற்றும் புதுப்பித்தலின் திருப்பயணமாகச் செலவிடப்பட வேண்டும் என நாம் அழைப்புப் பெறுகின்றோம்.

விவிலியத்தில் நாற்பது என்ற எண், பல்வேறு சிறப்பு அடையாளங்களைக் கொண்டுள்ள ஒன்றாகும். இஸ்ரயேலரின் 40 ஆண்டுப் பாலைவனப் பயணத்தை இது நினைவுபடுத்தி நிற்கின்றது. அப்பாலைவனப் பயணக்காலம், எதிர்பார்ப்பின், சுத்திகரிப்பின் மற்றும் இறைவனுடன் நெருக்கமாக இருந்த காலமாகும் அதுமட்டுமல்ல, சோதனையின் மற்றும் துன்பங்களின் காலமாகவும் இருந்தது. தன் பொதுவாழ்வைத் துவக்குவதற்கு முன்னால் இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்களைச் செலவிட்டத்தையும் இத்தவக்காலம் நினைவுறுத்தி நிற்கின்றது. இந்த நாற்பது நாட்களும் இயேசு செபத்தில் இறைதந்தையுடன் ஆழமான நெருக்கத்தில் இருந்தார். அது மட்டுமல்ல, தீமை எனும் மறைபொருளையும் அவர் எதிர்கொண்டார்.


தவக்காலம் ஒன்றிப்பின் காலம்

தவக்காலத் தன்னொறுப்பு என்பது இயேசுவின் பாஸ்கா மறையுண்மையில் அவரைப் பின்பற்றுவதற்கும், நம் விசுவாச வாழ்வை ஆழப்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கம் கொண்டதாகும். இந்த நாற்பது நாட்களும் நாம், நமதாண்டவரின் வார்த்தைகளையும் எடுத்துக்காட்டுக்களையும் ஆழமாகத் தியானிப்பதன் மூலம் அவரிடம் மிக நெருக்கமாக வந்து, நம் ஆன்மீக வறட்சி, சுயநலம் மற்றும் உலகாயுதப்போக்குகளை வெற்றிகொள்ளவேண்டும் என எமக்க காட்டுகின்றது. சிலுவையில் அறையுண்டு பின்னர் உயிர்த்தெழுந்த நமதாண்டவருடன் கொள்ளும் ஒன்றிப்பில், பாலைவன அனுபவத்தின் வழியாக உயிர்ப்பின் மகிழ்வு மற்றும் நம்பிக்கையை நோக்கி இறைவன் நம்மை வழிநடத்திச் செல்லும் இத்தவக்காலத்தில் நாம் அவருடன் ஒன்றிப்பை வளப்போம். ஒப்புரவாவது மிக அவசியமானதும் கூட. படைத்தவரோடு மட்டுமல்ல, நம்மோடு வாழ்வோரோடும் நாம் ஒப்புரவாவது காலத்தின் கட்டாயதேவையாகின்றது.

தவக்காலம் தீமையை நன்மையால் வெல்லும் காலம்

நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்று திருநீற்றுப் புதனன்று கத்தோலிக்கத் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை மையப்படுத்தி சிந்தித்தால் இந்த விவிலிய வார்த்தைகள் நம்மில் நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்குவதற்குப் பதில், நமது நிலையற்றத் தன்மையையும், அதனை மாற்றவல்ல இறைவனின் அருகாமையையும் நமக்குணநர்த்துவதை நாம் காணமுடியும். மண் என்ற அடையாளம் அழிவைக் குறிப்பதாகத் தெரிந்தாலும், நம்மில் ஒருவராய்ப் பிறந்து, இறந்து புதைக்கப்பட்டு, மீண்டும் உயிர்த்த கிறிஸ்துவின் வழியாக, இந்த மண்ணும் உயிர் தரும் சக்தி பெறுகின்றது. இந்த மண்ணில் தற்போதைய கலாசாரம், நன்மை தீமை குறித்த உணர்வை இழந்திருந்தாலும், தீமையை நன்மையால் வெல்ல முடியும் என்பதை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தம் முழு சக்தியுடன் உலகிற்கு வலியுறுத்த வேண்டும்

உறவை புதுப்பிக்க வருவதே இத்தவக்காலம்.

இறை மானிட உறவை புதுப்பிக்க வருவதே இத்தவக்காலம். இவ்வுறவை புதுப்பித்து கொள்ள மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே உரையாடல் செய்ய நம்மை அழைக்கின்றது இத் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மோடு உறவாடிய இறைவன்- இத்தவக்காலத்தில் தன் பாடுகளின் வழியாக நம்மோடு அவர் கொண்டுள்ள அன்பை-உறவை உறுதிபடுத்த நமக்கு அழைப்பு விடுக்கின்ற காலமே இந்த தவக்காலம். இறைவாக்கினர்கள் வழியாக பேசிய இறைவன் நீதிதலைவர்-அரசர்கள் வழியாக செயற்பட்டு தொடர்ந்தும் மானிட இனத்தின் இடறிய பாதையைச் சமன் செய்து  அன்புறவை கட்டியெழுப்ப இறுதியாக அன்னைமரி வழியாக தன் அன்பு மகனை மானிடர்பால் தந்தார். தவக்காலம் நமக்கு உறவை வளர்க நமக்கு தரப்படும் உறவின் அற்புதமான காலமாகும்.; நல்ல ஆரோக்கியமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதில் அக்கறை கொள்வோம். நம்முடைய நல்ல மாதிரிகையின் வழி புதிய சமூகத்தை கட்டியெழுப்புவோம். உறவிலே இறைவனை உயிர்ப்பிக்கச் செய்து, தெய்வ தரிசனம் பெறுவோம்.

 தவக்காலம் - உறவின் காலம். 

உறவின் உயிர்ப்பின் தளிர் நம்மிலே புதிய தசாப்தத்தை தர இத்தவக்காலத்தை பயன்படுத்துவோம். குறைகளை களைந்து, நிறைகளை காண அழைக்கும் காலமே தவக்காலம் இறைவனின் அளவுகடந்த அன்பால் இயேசு 30ம் வயதிலிருந்து  மூன்றாண்டு போதனைகளை மேற்கொண்டார். ஓய்வு உறக்கமின்றி காடுமேடுகளை கடந்தார். மூன்றாண்டு போதனைகள் முக்காலமும் உணர்ந்திடும் வண்ணம் இயேசவின் பாடுகள் நமக்கு உணர்த்துகின்றது. அவர் ஏற்ற துன்ப துயரங்கள், போராட்டங்கள், சவால்கள், அனைத்தும் நாம் நம்வாழ்க்கையை புரட்டி பார்த்து குறைகளை களைந்து, நிறைகளை காண மனமாற்றம் பெற  அழைக்கும் காலம் தான் தவக்காலம். தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதனை உணர்ந்திடுவோம். மன்னிப்பை இதயத்தில் நிறுத்தி நல்ல பண்பாட்டினை கரத்தில் ஏந்தி சமூகத்தில் வீறு நடைபயிலும்போது இறை ஆசிரும். இறை அன்னையின் வழி நடத்தலும் நமக்கு துணை இருந்திடும்.



1.14.02.2013 முதன்மையான இறைவன் எம் வாழ்வில் முதன்மையாக்குவோம்.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
தவக்கால சிந்தனை என்கின்ற இந்த தொடரின் இரண்டாம் நாளில் இறைமகன் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன பல அறிவுறைகளில் முதன்மையான ஒன்று உங்கள் நெறி சிறந்திருக்கட்டும் என்பதை சிந்திப்போம். பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் தலைமைகுருக்கள் இவர்கள் எல்லாருமே ஒருவகையான நெறியைப் பின்பற்றினார்கள்.ஆனால் அந்த நெறிகளை யெல்லாம் விட உங்கள் நெறி சிறந்திருக்கவேண்டும் என்று ஒரு அழைப்பைக் இயேசு கொடுக்கின்றார். நாமும் அந்த அழைப்பை ஏற்று வாழ்வதற்கு தகுந்த ஒரு காலம் தவக்காலம். இறைவனை ஏன் நாம் முதன்மையாக ஏற்று வாழவேண்டும் என எண்ணினால் பைபிளில் பல எடுத்துக்காட்டுக்கள் எமக்கு விளக்கம் தருகின்றன: நானே உன் கடவுளாகிய ஆண்டவர். அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து அஞ்சாதே, உனத்குத் துணையாய் இருப்பேன் என்று உன்னிடம் சொல்பவரும் நானே. ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள். ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள். அவரே நம்மைப் படைத்தவர், நாம் அவர் மக்கள். நமக்கு கடவுள் ஒருவரே. அவரே நம் தந்தை பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்று விழக்குகின்றது. அத்துடன் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்கே உலகு என்று எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன் அது போல உலகம் கடவுளில் தொடங்குகிறது என்று திருக்குறளும் திரிபின்றி கூறுகின்றது. எனவே செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்னை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ? ஆண்டவரை எப்போதும் என் கண்முன்னே வைத்துள்ளேன். நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச்செய்தாலும்,எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள் என கூறும் முதன்மையான இறைவன் எம் வாழ்வில் முதன்மையாக்குவோம்.

2.    15.02.2013 மனிதத்தை  புனிதமடையச் செய்வோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
சீனத் தத்துவயியலாளர் கன்பியூசியுஸ் சொல்கிறார்: "இதயத்தில் நேர்மை இருந்தால், தனி மனித வாழ்வில் அழகு மிளிரும்; தனி மனித அழகு மிளிர்ந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும்; குடும்பத்தில் அமைதி நிலவினால், நாட்டில் வளமை பெருகும்; நாட்டில் வளமை பெருகினால் உலகில் சமாதானம் ஊற்றெடுக்கும்."

தவக்காலத்தின் மூன்றாம் நாளாகிய நாம் தர்மம், இறை வேண்டல், நோன்பு ஆகியவற்யை மறைவாகச் செயல்படுத்திட நம்மை அழைக்கப்படுகின்றோம்  இம்மூன்று அறச் செயல்களும் தனி மனித இதயங்களிலும், வாழ்விலும் அழகைச் சேர்த்து, குடும்பங்களில் அமைதியை ஏற்படுத்தி, சமூகத்தில் வளமையையும், சமாதானத்தையும் உருவாக்கக்கூடிய கருவிகளாக இயேசுவின் பார்வையில் அமைகின்றன. தனி மனித மாற்றமானது சமூக மாற்றத்திற்கான தொடக்கமாக அமைவதால் இயேசு நம் ஒவ்வொருவரையும் இத்தவக் காலத்தில் மாற்றம் பெற அழைக்கிறார். மனம் திரும்புதல் என்பது மானுடத்தை நோக்கி நம் கண்களைத் திரும்புதலாகும். இன்றைய உலகின் மானுடம் உழுத பளிச்சிடுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்ட கொடிய நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில்தான் அன்பு, நீதி, பகிர்வு, சமத்துவம் போன்ற விழுமியங்கள் நிறைந்த புதிய மானுடம் படைக்க இறைவன் நம்மை அழைக்கிறார். இது இறைவனோடு நமது உறவை பலப்படுத்திக் கொள்ளவே. நாம் விழிப்போடு இருந்து எங்கே எப்படி இறைவன் உறவு பாலம் அமைக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ள தவக்காலம் அழைக்கின்றது. தவமுயற்சிகளை ஏற்போம். தானதர்மங்களை பகட்டாக அல்ல, மறைவாக உதவிசெய்து பலம் சேர்ப்போம்! செபம், தவம் தர்மம் போன்ற மூன்று வழிகளில் இறை மனித உறவை வளர்த்தெடுப்போம்
 இம்மாற்றம் நமது ஏற்றத் தாழ்வு மிக்க சமூகத்தையும் மாற்றி, இறையரசு நிலை பெற உதவும் என கத்தோலிக்கர்களாகிய நாம் நம்புவோம். தவக்காலம் அன்பின் காலம், அருளின் காலம், தனி மனித மற்றும் சமூக மாற்றத்தின் காலம், இறையாட்சிக் கனவை நனவாக்க உதவும் காலம், மனிதம் புனிதமடையும் காலம், மனமாற்றத்திற்கான காலம், மண்ணிலே விண்ணை விதைக்கும் காலம். நம்மை மாற்றத்திற்கு அழைக்கும் பல குரல்கள். ஒவ்வொருவரும் தூய இதயத்துடன், நேர்மையான மனத்துடன் ஒழுக்கத்தில் சிறந்து வாழ்ந்தால், செயல் பட்டால் அதுவே போதும்.  உலகம் வாழும்! மனிதன் வாழ்வான்! நல்லதைச் சொல்வோம்! நன்மையைச் செய்வோம்! நல்லவர்களாக வாழ்வோம்!

3.    16.02.2013 சனி, ஒப்புரவு அருள்சாதனம் தேவைதான
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று எம்மில் பலருக்கு ஒப்புரவு அருள்சாதனம் பெற்றுக்கொள்வதில் அக்கறை குறைவதற்கான காரணம் எத்தனை முறை பாவ அறிக்கை செய்தாலும், மீண்டும் மீண்டும் அதே பாவங்களைத்தானே செய்கிறோம் என்னும் விரக்தி மனநிலைதான். எம் மனிதப் பார்வையில் இந்த வாதம் நியாயமாகத் தோன்றினாலும், இறையியல் பார்வையில் அதில் ஒரு குறை இருக்கின்றது.
இறைவன் நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்கின்றார், தேடுகின்றார். எனவே, பாவ அறிக்கை செய்வதன் வழியாக நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். மேலும், இறைவனின் இரக்கத்தை, மன்னிப்பை அறிக்கையிடுகிறோம். எனவே, ஒப்புரவு அருள்சாதனம் ஒரு மன்னிப்பின் வழிபாடு மட்டுமல்ல, ஒரு விசுவாச மேடை, ஒரு இறைபுகழ்ச்சித் தளம். அதை மறவாமல் நாம் பாவ அறிக்கை செய்ய முன் வருவோம். நம்மையே தாழ்த்திக் கொள்வோம். கடவுள் நம்மை உயர்த்துவார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன் என இயேசு பாவிகளை அழைக்க வந்தார்.
ஒருமுறை புனித அகஸ்ரீனான் எமக்கு ஒவ்வொரு மணித்தியாலமும் ஒப்புரவு அருட்சாதனம் பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் பெறவேண்டும் ஏனெனில் நாம் பாவம் செய்கின்றோம் என கூறினார். பாவிகளைத் தேடிவந்த இயேசுவின் திருமுன் நாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வோம் மன்னிப்புப் பெற்ற ஒப்புரவு அருள்சாதனத்தில் அக்கறை காட்டுவோம். ஏமக்கு

4.    18.02.2013 திங்கள், நற்குடும்பத்தை உருவாக்க நற்பெறுப்பு ஏற்போம்.

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். என் மனத்திற்குப் பிடித்தவை மூன்று அவை ஆண்டவர் முன்னும் மனிதர்முன்னும் அழகுள்ளவை. அவை உடன்பிறப்புகளிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு, தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்.

குடும்பங்கள் மூவொரு இறைவனின் அழகைச் சிந்தித்து, அதனை வார்த்தைகளால் அல்ல, மாறாக, அன்பை வாழ்வதில் ஒளிக்கதிர்களாக வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றது. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குடும்பமும், மூன்று ஆள்களாக இருக்கும் ஒரே கடவுளின் சாயலாகத் திகழ்வதற்கு அழைக்கப்படுகின்றது. நாம் திருமணத்தை வாழும்போது ஒருவருக்கொருவர் ஏதோ குறிப்பிட்ட ஒருபொருளை அல்லது செயலை வழங்குவதில்லை, ஆனால் எங்களது முழுவாழ்வையுமே வழங்குகின்றோம். எங்களது ஆசைகள், ஒருவர் மற்றவர் விருப்பத்தை நிறைவேற்றல், கொடுப்பதிலும் பெறுவதிலும் நாங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றால் எங்களது அன்பு, எங்களது பிள்ளைகளைப் பொறுப்புடனும் தாராளமனத்துடனும் பெற்றெடுத்து அவர்களது நலனில் அக்கறை காட்டி ஞானம் நிறைந்த கல்வியை அளிப்பதிலும் அகைறை காட்டவேண்டும். மனிதரை மதித்தல், நன்றிமனப்பான்மை, நம்பிக்கை, பொறுப்பு, ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு போன்ற சமூகப் பண்புகளின் முதல் கல்விக்கூடமாகவும் குடும்ப வாழ்வு அமைந்துள்ளது. நாம், தொழில்நுட்பத்தால் ஆக்ரமிக்கப்பட்ட இன்றைய உலகில் எங்களது பிள்ளைகள்மீது கண்ணும் கருத்துமாய் இருந்து, சலனமற்ற மனநிலை மற்றும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான அர்த்தங்களையும், விசுவாசத்தின் வல்லமையையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். உயர்ந்த இலட்சியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களது பலவீனங்களில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். உரையாடலை வளர்த்து, ஒருவர் ஒருவரின் கண்ணோட்டத்தை மதித்து, சேவை செய்வதற்குத் தயாராக இருந்து, பிறர் தவறும்போது பொறுமை காத்து, பிறரை மன்னித்து, மன்னிப்புக் கேட்டு, மோதல்கள் ஏற்படும்போது அறிவு மற்றும் பணிவால் அவற்றைச் சமாளித்து, பிற குடும்பங்களுக்குத் திறந்த மனதாக இருந்து, ஏழைகள்மீது அக்கறை காட்டி, சமுதாயத்தில் பொறுப்புள்ளவர்களாய் வாழ்வோம்

5.    19.02.2013 மன்னிப்போம் மன்னிப்பு பெறுவோம்.
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார். ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு ஓர் இறைவேண்டல் கற்றுத் தந்தார். இறைவனையும் மனிதரையும் உறவால் இணைக்கின்ற பாலம்தான் இயேசு கற்பித்த இறைவேண்டல்.
யூதர்களை ஜெர்மானியர் லட்சக்கணக்கில் சிறைப்படுத்திக் கொன்றபோது அவர்களுக்குத் தம் வீட்டில் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்ததற்காக கோரிபிரவுனும் அவரது சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவரது சகோதரி சிறையில் இறந்தார். கோரி பிரவுன் பின்னர் விடுதலை பெற்றபோது ஜெர்மானியரை மன்னிப்பது பற்றி பல ஊர்களுக்கும் சென்று உரை நிகழ்த்தி வந்தார். அவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் உரை நிகழ்த்தி முடிந்ததும் ஒருவர் அவருக்குக் கை குலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார். அவர் கோரி பிரவுன் சிறையில் இருந்தபோது அவருக்குச் சிறைக்காவலராக இருந்தவர். கை கொடுத்த கோரி அவரை இனம் கண்டு கொண்டபோது அவர் உடல் நடுங்கியது. வெறுப்பு உணர்ச்சி பொங்கியது. கையை உடனே திருப்பி எடுக்க நினைத்தார். மன்னிப்பு வழங்குவது பற்றி உரை நிகழ்த்தினாலும் மன்னிப்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை என்றாராம் ஒருமுறை. நமக்கு எதிராகத் துரோகம் செய்தவர்களை மன்னிக்க நாமும் மிகச் சிரமப்படுகிறோம். நம்மீது பொய்க்குற்றங்களைச் சுமத்திக் காட்டிக் கொடுப்பவர்களை மன்னிப்பது அவ்வளவு எளிதாக நமக்குத் தெரிவதில்லை. இந்தப் பிரச்சனையை நாம் எவ்வாறு சமாளிக்கிறோம். ஒருவரை மன்னிக்கத் தயங்கும் போது நாம் என்ன செய்கிறோம். நெஞ்சை நிரப்பும் உணர்வுகளை நாம் எவ்வாறு நீக்க முயல்கிறோம். இயேசு நமக்கு கூறும் வார்தைகள் நம் சிந்தனைக்கு ஒளியூட்டுகிறார்.

6.    20.02.2013 மன மாற்றம் மனிதனின் விடுதலைக்கு அவசியம்
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

நினிவே நகரத்தில் வாழ்ந்த மக்கள் தாம் பாவ வாழ்வில் வாழ்கின்றோம் என எடுத்துக்கட்டப்படு மனந்திரும்புவதற்கான அறைகூவல் விடப்பட்டபோது குறைகூறவில்லை, ஏளனம் செய்யவில்லை, தள்ளிப்போடவில்லை. மாறாக, உடனே அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் வாழ்வை மாற்றிக்கொண்டார்கள்.
அசாதாரன நிகழ்வுகள், புலன்களுக்கு எழுச்சி தரக்கூடிய அடையளங்கள் கவர்ச்சியான வார்த்தைகள், காட்சிகள் இவற்றை இன்றை மனித மனம் தேடுகின்றது. இதனால்  மனித மனம் அடிமைப்படுகின்றது. விடுதலை அடைவதில்லை. மனமாற்றம் என்னும் இறைரசின் நுழைவுச் சீட்டு வெறும் எழுச்சியில் கிடைப்பதல்ல மாறாக இதையத்தை இறைவனின் அருள்செயலுக்கு எழுப்புவதன் முலம் கிடைப்பதாகும். இந்த மன மாற்றம் மனிதனின் விடுதலைக்கு அவசியம் நினிவே மக்கள் தங்கள் நெஞ்சங்களை இறைவார்த்தைக்கு திறந்து வைத்ததால் அவர்கள் இதயங்கள் திறக்கப்பட்டன. மனமாற்றம் விளைந்தது.நாமும் நம் இதயத்தை வருடும் இறைவனின் அருளடையாளங்களை நமக்கு வெளியே அல்ல நம் உள்ளத்திற்குள் உணர்து கொள்வோம்.
இயேசு தம் தலைமுறை மக்களை நினிவே நகர மக்களோடு ஒப்பிட்டு, நினிவே நகர மக்களைப் பாராட்டுகிறார். தமது தலைமுறையினரைக் கண்டனம் செய்கிறார். இந்த வாசகத்தின் மூலம் இன்று நாமும் நினிவே நகர மக்களோடு ஒப்பிடப்படுகிறோம்.
இத்தவக்காலம் மீண்டும் ஒருமுறை நமது வாழ்வை ஆய்வு செய்ய, மாற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது. நாம் என்ன செய்கிறோம். அலட்சியம் செய்கிறோமா? புறக்கணிக்கிறோமா? ஒத்திப்போடுகிறோமா? அல்லது நினிவே நகர மக்களைப் போல உடனே கீழ்ப்படிகிறோமா? உடனே செயல்பட்;டால், நினிவே மக்களைப் போல நாமும் பேறுபெற்றவர்களாவோம். அல்லது கண்டனம் செய்யப்படுவோம்.

7.    21.02.2013 “” பணியாளராவோம்
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
மனிதனுட்பட அனைத்து உயிரினங்களையும் நொடிப்பொழுதும் கைவிடாமல் காத்துவரும் இறைவன், எவருடைய வேண்டுதலையும் மறுப்பதில்லை என்பதை மானிதனுக்கு உணர்த்தவே இயேசு கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

இன்று அன்றாடம் எம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், நமக்கு ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், எம்மை நசுக்குகின்றது எல்லாம் பெற்றிருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற வரண்ட வாழ்க்கை, சமூக வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் உரசல்கள், வாழ்வை கேள்விக்குறியாக்கும் இன்னும் மோதல்கள் பலப்பல. இதனால் மனிதன் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஏங்கித் தவிக்கும் போது, அவனது நெஞ்சத்தில் பிறக்கும் கேள்விகள், தேடல்களாகின்றன. அந்த நிலையில் மனிதன் தனது கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்து இறைவனை நோக்கி திரும்புகிறான். அறிவு கொண்டு சிந்தித்து உரிய பதில் கிட்டாமல், மேற்கொண்டு செல்ல பாதை தெரியாமல், திக்கற்ற நிலையில் அவனுடைய மனதிலிருந்து எழுந்த கேள்விக்குத்தான் இயேசு அளித்த பதில், கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பது. இயேசு நாம் கேட்பவற்றையே இறைவன் வழங்குவார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்

நமது வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் சுய நல போக்குகளும், தான்தோன்றித்தனமாக செயல்களுமே நமது துன்பங்களுக்கு காரணம் என்பதையுணர்த்தி, அதனைத் தவிர்க்க இயேசு கூறுகிறார், ஆகவே, பிற மனிதர் எங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளையே நாங்களும் அவர்களுக்குச் செய்றய வேன்டும், இதுவே நியாயம்;, தீர்க்க தரிசனம் என்று வழிகாட்டியுள்ளார். வாழ்க்கை நடைமுறைகளில் நாம் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறையையும், கொள்ளவேண்டிய மனப்பான்மையையும் இவ்வாறு தெளிவாக கூறியுள்ள இயேசு, ஆன்மீகப் பாதையையும் அற்புதமாய்க் காட்டியுள்ளார். அண்ணல் ஆண்டவரை தேடி இத் தவக்கலத்தில் ஓடுவோம்.

8.    22.02.2013 புனிதர்கள் பேதுருவையும் பவுலையும் எம் முன் நிறுத்துவோம்

     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
திருத்தூதர் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று விசவாச அறிக்கையிட்ட பின், உன் பெயர் பேதுரு இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் என்று விண்ணரசின் திறவுகோல்களை அவரிடம் தருவதாக வாக்குப்பண்ணினார்.

தற்காலத்தில் தினம் நாங்களும் விசுவாச அறிக்கை செய்யவதில்லையா? ஆமாம். தினமும் செய்கின்றோம். ஆகவே நாங்களும் பாறைகள்தான். அந்த பாறையின் ஒரு பகுதிதான். எங்கள் விசுவாசம் உறுதியாக இருந்தால், நாங்களும் பாறைதான். எங்களை யாரும் எதுவும் அசைக்க முடியாது. எந்த தீங்கும் எங்களை அணுகாது. தீண்டாது. மேற்கொள்ளாது.அந்த பாறையிடம் வழங்கப்பட்ட ஆற்றல் அனைத்திலும் எங்களுக்கும் பங்கு உண்டு. அந்த பாறையிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அனைத்திலும் எங்களுக்கும் பங்கு உண்டு. விண்ணரசின் திறவுகோல் எங்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இறை ஆட்சியில் பங்கு கொள்வது முற்றலும் எங்கள் பொறுப்பு.

சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வியும் காட்சியில் தோன்றிய ஆண்டவரிடம் சவுல் கேட்ட கேள்வியும் இறை அறிவு பெருவதற்கான முயற்சிகள். அதே வேளையில் இக் கேள்விக்கான பதில்கள் அவர்கள் மேல் கடமையையும் பொறுப்பையும் சுமத்துகின்றன. நாமும் புனித பவுலைப்போல கேள்வி கேட்கவும் புனித பேதுரு போல பதில் சொல்லவும் இத்தவக்காலத்தில் எம்மை தயர்படுத்தவும் வேண்டும். வெறுமனே கேள்வி கேட்பவனாக மட்டுமிருந்தால், அது பொருப்பற்ற தன்மையின் அடையாளம். எங்கள் கேள்வியும் பதிலும் எங்கள் மேல் பெரும் பொறுப்பினைக் கொண்டு வருகிறது. அந்தக் கேள்விக்குப் பின் பவுல் மிகுந்த ஆர்வத்தோடு இயேசுவிற்காக தன்னை அhற்பணித்து பணியாற்றினார். பேதுரு தன் பதிலுக்கு ஏற்ற பணியாற்றியதையும் நாம் அறிவோம். பங்குகளில் பலர் கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். புனிதர்கள் பேதுருவையும் பவுலையும் எம் முன் நிறுத்துவோம். திருச்சபையில் நம் பங்களிப்பை வழங்குவோம்.

9.23.02.2013 நாம் அவர்களிடம் அன்பினை கொடுத்தால், கடவுளை கொடுக்கிறோம்.
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு வழங்கிய போதனைகளில் மிக முக்கியமான ஒன்று அன்புக் கட்டளை ஆகும். எல்லா மனிதரையும் அன்புசெய்யக் கேட்ட இயேசு நம் பகைவரையும் நாம் அன்புசெய்திட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்ட இயேசு,'பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று கூறினார்.

நம்மிடம் இருக்கின்ற பொருள்களை மட்டுமல்ல, நம் நேரத்தையும் திறமைகளையும் நாம் பிறருக்கு உதவிசெய்வதில் செலவிடும்போது நாம் தாராள உள்ளத்தோடு செயல்படுகிறோம் எனலாம். நாம் அளந்தளிப்பது பிறருக்குத் தாராளமாகச் சென்று சேரவேண்டும் என்றால் நம் உள்ளம் அன்புணர்வினால் நிறைய வேண்டும்; கடவுள் நம் மட்டில் காட்டிய தாராளத்தை நாம் பிறர் மட்டிலும் காட்ட வேண்டும். எனவே, 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" என இயேசு கூறுகின்றார். இயேசு வழங்கும் அறிவுரையின் அடிப்படையில் நம் உள்ளத்திலும் வாழ்விலும் இரக்கம் என்னும் நற்பண்பு மேலோங்கி விளங்கிட நாம் முயன்றிட வேண்டும்.

இரக்கம் தான் இன்று நற்செய்தியை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுனை. அன்பு தான் மற்றவர்களின் இதயத்திற்குள் நாம் நுழைய முதல் கதவு. அவர்கள் அந்த கதவை மூடினால் நாங்கள் இரக்கம் என்னும் பின் கதவு மூலமாக செல்லலாம். நாம் அவர்களிடம் அன்பினை கொடுத்தால், கடவுளை கொடுக்கிறோம். நாம் தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருந்தால், நாம் கடவுளையும், அவரது குணப்படுத்தலையும் பெறுவோம்.

10.25.02.2013 குற்றம் புரிந்தவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கு முதல்படி மன்னிப்பே
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

நாம் பிறரை மன்னிக்கும்போது, இறைவன் நம்மை மன்னிக்கின்றார் என்பதை நாம் அறிவோம். இயேசு கற்பித்த செபத்தில், இயேசு அவ்வாறு செபிக்க நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார். இன்றைய வாசகத்தின் வழியாக மன்னிப்பினால் நாம் ஏராளமான ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம் என்னும் செய்தியை இயேசு நமக்குத் தருகிறார்.

குற்றம் புரிந்தவர்களை ஒதுக்கிவைக்காமல் அவர்களோடு மீண்டும் நல்லுறவு ஏற்படுத்துவதற்கு முதல் படியாக மன்னிப்பு அமைகிறது. மன்னிப்பு என்பது அன்பின் ஒரு சிறப்பான வெளிப்பாடும்கூட. அன்பு என்றால் பிறரின் நலனை நாடுவது என்று பொருள். நமக்கு எதிராகச் செயல்பட்டோரை அன்புசெய்வது நம் நண்பரை அன்புசெய்வதைவிடவும் அதிகக் கடினமானது. ஆனால் இயேசு தம் சீடரிடம் மன்னிப்பின் தேவையைச் சிறப்பான விதத்தில் வலியுறுத்தியுள்ளார். இயேசுவின் போதனைப்படி, மன்னிப்பு வழங்குவது கடவுளின் உயர்ந்த பண்பு. இதையே லூக்கா இரக்கம்என விளக்குவார். இயேசு, உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளர்களாய் இருங்கள் என்று போதித்தார்.

கடவுளைப் போல மனிதர் இரக்கம் கொண்டிருப்பது இயலுமா என்றொரு கேள்வி எழலாம். கடவுள் எல்லையற்ற அன்பும் இரக்கமும் உடையவர். மனிதர் எவ்வளவுதான் முயன்றாலும் கடவுளுக்கு நேரான விதத்தில் அன்புகாட்ட அவர்களால் இயலாது. எனினும் மனிதருக்கே உரிய விதத்தில் நிறைவான அன்பையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் வெளிப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். மன்னிப்பு என்பது கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடை. நாம் பெறுகின்ற கொடையைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது தேவை. எனவே. கடவுள் நம்மை மன்னிப்பதுபோல நாமும் பிறரை மன்னிக்க முன்வந்தால் அதுவே நாம் கடவுளின் நிறைவை நம் வாழ்வில் அடைந்திட முயல்கின்றோம் என்பதற்கு அடிப்படையாகும்.

நாம் பிறருக்கு மன்னிப்பை வழங்கும்போது, பிறரும், இறைவனும் அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படியாக நன்றாக அளந்து ஆசிர்வாதங்களை நம் மடியில் போடுவார்கள். எனவே, இத்தவக்காலத்தில் யாருக்கெல்லாம் நமது மன்னிப்பு தேவைப்படுகிறதோ, அவர்களையெல்லாம் மனமார மன்னிப்போம். அவர்களை ஆசிர்வதிக்க இறைவனிடம் வேண்டும்.

11.    26.02.2013  நம் நடத்தையைப் பற்றிக் கவனமாயிருப்போம்.
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று இயேசு நமக்கு ஒரு நல்ல ஆசிரியர் தேவை என்கிறார். இன்றைய பைபிள் பகுதி  நமக்கு ஆசிரியர்கள் சரியான வழியை மக்களுக்குக் காட்டவில்லை. தாங்கள் புகழ்பெறவும் மதிக்கப்படவுமே விரும்பினர். இவர்களிடம் உண்மை இல்லை, நீதி நிலைபெறவில்லை, மக்கள் மேல் அக்கறை இல்லை. சொல்வது ஒன்று செய்வது வேறோன்றுமான வெளிவேடம்.தம் காலத்தைய ஆன்மீகத் தலைவர்களைப் பற்றிய இயேசுவின் பார்வை மிகத் தெளிவானதாக இருக்கிறது. அவர்களின் முரண்பாடான வாழ்வை இயேசு கண்டித்தார். அதே வேளையில் அவர்களின் தலைமையை அவர் மறுக்கவில்லை. ஆகவேதான், இயேசு கூறுகிறார்: அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ, அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள்? ஒரே நேரத்தில் இயேசுவின் தீர்ப்பும், பரிந்துரையும் இதில் அடங்கியுள்ளன. பரிசேயர்களும், மக்கள் தலைவர்களும் முரண்பாடான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதை இயேசு கண்டிக்கிறார். புறக்கணிக்கிறார். அதே வேளையில், தம்முடைய சீடர்கள் மக்களுக்குஎடுத்துக்காட்டாக,மாதிரியாக, முரண்பாடற்றவர்களாக விளங்க வேண்டும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்துகிறார்;. நல்ல தலைவர்கள் சொன்னதைச் செய்கிறார்கள், செய்வதை பிறருக்கு அறிவிக்கிறார்கள். நாம் எப்படி?

நம்முடைய வாழ்வையும் இந்தப் பார்வையில் கொஞ்சம் அலசினால் நல்லது. யாராவது நம்மைப் பற்றி மற்றவர்களிடம்: நாங்கள் என்னென்ன நல்ல செயல்கள் செய்யும்படி கூறுகிறோமோ, அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள்?. இந்த அறிவுரையைக் கொடுத்தால் நமக்கு எப்படி இருக்கும்? நம்முடைய வாழ்வு பிறருக்க எடுத்துக்காட்டானதாக இருக்க வேண்டுமேயொழிய, எதிர்சாட்சியாக இருக்கக் கூடாது. எனவே, நம்முடைய அறிவு, திறமைகள், ஆளுமை,பேச்சாற்றல் போன்ற பல இருந்தும் நம்மைப் பற்றி இத்தகைய ஒரு  திறனாய்வை பிறர் முன் வைத்தால், அது நமக்கு மிகப் பெரிய ஓர் அவமானம். எனவே, இத்தவக்காலத்தில் நம் வாழ்வைப் பற்றி, நம் நடத்தையைப் பற்றிக் கவனமாயிருப்போம். முடிந்தால், இவரைப் போல வாழுங்கள் என்று பிறர் நம்மைப் பற்றிச் சொல்லும் வண்ணம் நடப்போம். முடியாவிட்டால், இவர் செய்வதுபோல் செய்யாதீர்கள் என்று பிறர் சொல்லாத வண்ணமாவது நடக்க அக்கறை கொள்வோம்.

12.    27.02.2013 சிம்மாசனமா?, சிலுவையா? தேர்ந்து கொள்ளுங்கள்.
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

மதிப்பும் மரியாதையும் பெறுவது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஊற்றெடுக்கும் தாகம். இத்தாகத்தைத் தணிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கொண்டு, மரியாதையின் இலக்கணத்தைப் பலரும் பல வழிகளில் எழுதுகிறோம். முக்கிய நிகழ்வுகளுக்கு என்னைதான் பிரதம விருந்தினராக அழைக்கவேண்டும் என வற்புறுத்தி சிம்மாசனங்களில் அமர்ந்து மாலைகள் பெறுவது ஒருவகை மரியாதை. சிலுவைகளில் அறையப்பட்டு உருகுலைந்தாலும், மக்களின் மனம் எனும் சிம்மாசனங்களில் அமர்வது மற்றொரு வகை மரியாதை. எம்காலத்தில் எம்முடனே வாழ்ந்து புனிதர்களாக மாறுபவர்கள் பெற்றுள்ள மரியாதை, சிம்மாசனங்களில் அமர்ந்து அதிகாரம் செய்ததால் வந்த மரியாதை அல்ல. இவர்களில் பலரின்  சிலுவைகளைச் சுமந்ததால் இன்று புனிதர்களாக நம்முன் உயர்ந்து நிற்கிறார்கள். சிலுவை வழியில், சேவை வடிவில் இப்புனிதர்கள் மதிப்பும், மரியாதையும் பெறுகிறார்கள். துவர்கலத்தின் இனை;ற பைபிள் பகுதி சிலுவையா, சிம்மாசனமா என்ற கேள்வியை நமக்கு முன் வைக்கிறது. சிலுவை, சிம்மாசனம் இரண்டும் அரியணைகள். சிம்மாசனம் என்ற அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு.
ஒரு முறை, அன்னையுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: எனக்கு யாராவது பத்தாயிரம் டாலர்கள் தருகிறேன் என்றால்கூட இது போன்ற வேலைகளை நான் செய்யமாட்டேன் என்றாராம். அதற்கு அன்னை தெரேசா அவரிடம்: நானும் அப்படித்தான். பத்தாயிரம் டாலருக்காக இந்த வேலைகளைச் செய்யமாட்டேன். என்று பதில் சொன்னாராம். நாம் மட்டும் சுகம் காணலாம் என்று அரியணை ஏறி அமர்ந்தால், கூடியிருப்பவர்கள் கூட நம்மை மதிக்கமாட்டார்கள். கட்டாயம் நேசிக்கவும் மாட்டார்கள். பலருக்கும் சுகம் தருவதற்கு சிலுவை என்ற அரியணை ஏறினால், பல நூறு ஆண்டுகளுக்கும் மக்கள் மனதில் மதிப்போடும், அன்போடும் அரியணை கொள்ள முடியும்.

13. 28.02.2013 எம் வருமானத்தில் ஒரு சதவீதம்மாவது வறிய மாணவரின் கல்விக்காக கொடுப்போம்.
      ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்றைய பைபிள் பகுதியில் வரும் இலாசரும், செல்வரும் என்னும் அழகான உவமைக்கதை பல செய்திகளைத் தன்னிலே கொண்டிருக்கிறது. இந்த கதையில் வரும் செல்வரை பற்றி சிந்திப்போம். அந்த செல்வர் செய்த ஒரே தவறு, தான் மட்டும் நாள்தோறும் விருந்துண்டு தன்னலத்தோடு இன்பங்களைத் அனுபவிப்வித்ததுதான். அதிலேயே வாழ்வைக் கழிப்பதும் தவறு. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுகின்றோம். வாய்ப்புகள் வரும்போது வசப்படுத்தாதவன் முட்டாள். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் இன்னொரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பது அறிவீனம். அதைவிட கிடைத்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துவது மிகப்பெரிய தண்டனைக்கு நம்மை ஆளாக்கிவிடும். நம்மில் பலருடைய நிலை இதுதான். இந்த பணக்காரன் இப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. தவறாகவும் பயன்படுத்தினான். நிறைந்த செல்வம் இருந்தது. ஏழைகளுக்கு உதவும் வாய்ப்பு இருந்தது. போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவுங்கள் என்ற போதனை பல விதங்களில் போதிக்கப்பட்டது. கண்டுகொள்ளாமல் இருந்தான். தன்னுடைய சுகமான வாழ்வில் நாட்களை கழித்தான். அவன் செய்யாமல் விட்ட நல்ல செயலுக்காக அவனுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.
நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை என்னும் சொற்களை நாம் தீர்ப்பு நாளில் கேட்காமலிருக்க வேண்டும் என்றால் இன்றே இத்தவக்காலத்திலிருந்தாவது நம்மைச் சூழ்ந்திருப்போரில், குறிப்பாக ஏழைகளுக்கு  பசியை ஆற்றிட முன்வர வேண்டும்.எங்கள் வருமானத்தில் ஒரு சதவீதம்மாவது ஏழைகள், அல்லது வறிய மாணவ மாணவியரின் கல்விக்காக கொடுப்போம். மொத்தமாக சேர்த்து ஒரு நாள் ஒரு மாணவனுக்குகாவது கொடுப்போம். எங்கள் உள்ளத்தில் ஒரு இனம் புரியாத தெய்வீக மகிழ்ச்சி உருவாகும் எம்டுமன் என்றும் இருக்கும். மறைவாய் செய்த நற்செயலைக் காணும் இறைவன் உங்களுக்கு அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். என்று பையிளில் இறைவன் கூறுகின்றார்.

14.    01.03.2013 கடவுள் நமக்கு வாக்களிக்கின்ற பேரின்பத்தை நமதாகும்
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக்
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்… என்று கூறும் பைபிள் கதை இன்று தரப்படுகின்றது. -- தோட்டத்தில் வேலை செய்து காய்கறிகளைப் பயிரிடுவதும் மலர்களை முகிழச் செய்வதும் மனத்திற்கு இதமான பொழுதுபோக்காகவோ தொழிலாகவோ இருக்கலாம். இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து பழங்களைக் கனியச் செய்யும் தொழில் சாதாரணமாக நடந்துவந்தது. அதுவே இயேசுவின் வாயில் ஓர் அழகிய உவமையாக உருவெடுக்கிறது. தோட்டத் தொழிலாளர்களிடம் தம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டுப் பயணமாகிச் செல்கிறார் நிலக்கிழார் ஒருவர். அவர் உரிய காலத்தில் பழங்களைப் பெற்றுவரும்படி அனுப்பிய தூதர்களை அக்குத்தகைக்காரர்கள் துன்புறுத்திக் கொன்றுபோடுகிறார்கள். ஏன், நிலக்கிழாரின் சொந்த மகனையே அவர்கள் கொலைசெய்துவிடுகின்றனர். இயேசு இந்த உவமைக்கதையை தம்மைப் பற்றியே கூறினார். அவர்தான் அனுப்பப்பட்ட மகன். அவரைத்தான் மக்கள் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். இது இயேசு எருசலேம் நகருக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. இவ்வாறு கொடிய மனத்தோடு செயல்பட்ட அக்குத்தகைக்காரர்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்பட்டு, வேறு மக்களினத்தாரிடம் கொடுக்கப்படும் என இயேசு கூறுகிறார்.

அன்று மக்கள் பிரமாணிக்கமற்ற விதத்தில் நடந்துகொண்டதால் அவர்களிடமிருந்து இறையாட்சி எடுக்கப்பட்டு, பிற இனத்தாரிடம் கொடுக்கப்படும் என இயேசு கூறியதை நாம் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். நம் கையில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்துவிட்டு கடவுள் பயணம் போகிறார் என நாம் ஒருவிதத்தில் கூறலாம். ஆனால் கடவுள் நம்மைத் தேடி மீண்டும் வரும்போது நாம் என்ன கணக்கு கொடுப்போம். நம்மிடம் பொறுப்பாகத் தரப்பட்ட தோட்டத்தை நாம் நல்முறையில் பண்படுத்தி, அதிலிருந்து நாளும் பலன் கொண்டு வருகின்றோமா? அல்லது நம் தோட்டத்தைத் தரிசாக விட்டுவிட்டுகின்றோமா. இத்தவக்கலத்திலிருந்தாவது நாம் பொறுப்புடைய மனிதராக வாழ்ந்தால் கடவுள் நமக்கு வாக்களிக்கின்ற பேரின்பம் நமதாகும்.

15.    02.03.2013 ஊதாரித் தந்தை, ஊதாரி மகன், சினமுற்று சகோதரன், நாம் இங்கு யார்

     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

ஊதாரி மைந்தனின் உவமைக்கதை இன்று பைபிள் பகுதி சிந்திப்பதற்காக தரப்படுகின்றது: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். இளையவர் தந்தையை நோக்கி, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் என பெற்று சென்று தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். பின்பு பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. கடவுளுக்கும் தந்தைக்கு எதிராக நான் பாவம் என தவற்றை உணர்ந்து தந்தையிடம் திரும்பி வரும்போது தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். ”

ஊதாரி மகன் எந்த அளவுக்குத் தன் சொத்துக்களை அழிப்பதில் ஊதாரியாக இருந்தானோ, அந்த அளவுக்கு அன்பு காட்டுவதிலும், இரக்கம் அளிப்பதிலும் ஊதாரியாக இருந்தார் தந்தை. இன்று சினம் கொண்டு, விருந்தில் கலந்துகொள்ளாமல் வெளியே நின்ற மூத்த மகனைப் பற்றிக் சிந்திப்போம். “இளைய மகன் கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன் ” என்று ஒத்துக்கொள்கிறான். ஆனால், மூத்த மகனோ வெளிப்படையாக எந்தப் பாவமும் செய்யவில்லை. மாறாக, தந்தையின் பரிவைக் கண்டு சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாது வெளியே நிற்கிறார். தந்தை வந்து உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டும் உள்ளே செல்லவில்லை. மாறாக, தந்தையின் மன்னிப்பில் குறைகாண்கிறார், குற்றம் சாட்டுகிறார். இந்த மூத்த மகன் தண்டிக்கப்பட்டதாகவோ, தந்தையால் கடிந்துகொள்ளப்பட்டதாகவோ உவமைக்கதையில்  சொல்லப்படவில்லை. இருப்பினும், பொறாமை, சினம், தந்தைக்கு அவமதிப்பு, தம்பியின் மனமாற்றத்தில் மகிழாமை, தந்தையையே குறைகாணும் மனநிலை எனப் பல்வகைப் பாவங்கள் இவர் செய்துள்ளார் என்பது வெளிப்படை”. நாமும் சில வேளைகளில் இறைவனின் இரக்கத்தில் எரிச்சல் கொள்கிறோம், மனமாற்றம் அடைவோரைக் கண்டு கேலி செய்து இறைவனையே அவமதிக்கிறோம். இத்தவக்கலத்தில்  இறைவனிடம் வருந்தி மன்னிப்பு கோருவோம். பிறரின் மனமாற்றத்தில் மகிழ்வோம்

16.    04.03.2013 சமுதாயம் பயன் பெறும் எம்மை பணியாளராக்குவோம்
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று இயேசு கூறும் பைபிள் பகுதி நமக்கு இன்று தரப்படுகின்றது. கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்தவர்கள் இறைவாக்கினர். இவர்கள் மக்களையும் ஆட்சியாளர்களையும் கண்டித்துப் பேசியதுண்டு; தம் தீய நடத்தையை விட்டுவிட்டு கடவுளை நோக்கித் திரும்பவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியதுண்டு. மேலும் இறைவாக்கினர்கள் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்பதையும் அறிவித்தார்கள். ஆனால் உண்மையான மன மாற்றம் நிகழாவிட்டால் மக்கள் அழிந்தொழிவார்கள் என்னும் செய்தியையும் இறைவாக்கினர் அறிவித்தனர்.

மக்களுக்குப் பிடிக்காத உண்மைகளையும் கசப்பான யதார்த்தங்களையும் இறைவாக்கினர் துணிந்து அறிவித்ததால் அவர்களுடையே உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட நேரங்களும் உண்டு. எனவே, இயேசு “இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என்று கூறிய சொற்கள் அவருடைய வாழ்க்கையிலேயே உண்மையாயின. இயேசு புரிந்த அரும் செயல்களைக் கண்டு, அவர் அறிவித்த இறையாட்சிச் செய்தியைக் கேட்டு மக்கள் எல்லாரும் உடனே அவரை வரவேற்று ஏற்கவில்லை. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிப் பல விவரங்கள் தெரிந்திருந்ததால் அவரைப் பற்றி மேலும் அறிய முன்வரவில்லை. நம் வாழ்க்கையிலும் இவை நிகழக் கூடும்.
இந்தச் சமுதாயத்தில் எமக்கென ஒரு பணியை இறைவன் தீர்மானித்துள்ளார். அதை நாம் நிறைவேற்றவேண்டும். ஒருவேளை எம்மைச் சுற்றி வாழும் சமுதாயம் அதைப் பயன்படுத்தாமல் போகலாம் ஆனால் பரந்து விரிந்த சமுதாயம் பயன் பெறும். இயேசு யார் என்று ஒவ்வொரு நாளும் இயேசுவைப் புதிதாக அறிகின்ற மனதை உருவாக்குவோம். அப்போது அவரது சாயல் நம்மில் மேலும் தெளிவாகத் தெரிந்திட வழிபிறக்கும். எனவே, இயேசுவின் குரல் நம் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அக்குரலுக்கு நாம் செவிமடுத்து அவரைத் தயக்கமின்றிப் பின்தொடர வேண்டும்.

17.    05.03.2013 மன்னிக்கும் மனப்பான்மையை நமக்குத் தர வேண்டுவோம்
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மற்றவர்களை நாம் மனமார மன்ன்pக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் என்று இயேசு கூறும் பைபிள் பகுதி நமக்கு இன்று தரப்படுகின்றது. மன்னியுங்கள்! மன்னிப்புப் பெறுவீர்கள். மன்னிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் மன்னித்தவர்கள் மகான்களாக மாறி இருக்கிறார்கள். வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள். உண்மையே வெல்லும் என்ற காந்தி அடிகளை கோட்சே சுட்டுக் கொன்றான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்றார் மகாத்மா. அடிமை விலங்கொடித்து அன்பு செய்த ஆபிரகாம் லிங்கனை பூத் என்பவன் சுட்டான். அவன் விருப்பம் போல் செய்யட்டும். விட்டுவிடுங்கள் என்றார் லிங்கன். திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலை 1981-ல் ஆக்கா என்பவன் சுட்டான். சிறைக்குச் சென்று அவனைச் சந்தித்து திருவிவிலியத்தை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார் திருத்தந்தை.  வுத்திகானின் இரகசிய தகவல்களை வெளியிட்டனை திருத்தந்தை 16 பெனடிற் சிறைசாலை சென்று தந்தைக்குரிய பசத்துடன் உரையாடி மன்னித்தார். மார்ட்டின் லூதர் கிங், ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் என்று பல பேர் தங்கள் உயிருக்கே உலை வைத்தவர்களை மன்னித்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். பிதாவே! தாங்கள் செய்வதென்னவென்று அறியாத இவர்களை மன்னியும் என்றார் இயேசு.

ஒருவரை எத்தனை முறை மன்னிக்க முடியும்? நானும் மன்னித்துக் கொண்டே இருக்கின்றேன். அவர்; தொடர்ந்து எனக்குத் தீமை செய்து கொண்டே இருக்கின்றார் என்று பல நேரங்களில் நாம் கூறுகின்றோம். மன்னிப்பதற்கு அளவே இல்லை என்பதை இயேசு, ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை மன்னிக்க வேண்டுமென்று கூறுகிறார். அன்பின் உச்சகட்டமே மன்னிப்பு. எனவே இப்போதே நாம் மன்னிக்க முடியாத தருணங்களை ஆண்டவரின் முன்னிலையில் நினைவில் கொண்டு வருவோம்.  நாமும் மனதார அவர்களை மன்னித்து ஆசி கூறுவோம்! இது எல்லோருக்கும் எளிதான காரியம் அல்ல. ஆனால் தொடர்ந்து இறைவனிடம் ஜெபிக்கும்போது இறைவன் நம் மனக்காயங்களையும் வெறுப்புகளையும் மாற்றி, இறையருளைப் பொழிந்து, மன்னிக்கும் மனப்பான்மையை நமக்குத் தந்தருள்வார்கள்.  நம் அன்பு இயேசு எப்போதும் நம்மை மன்னிக்கத் தயாராக உள்ளார். நாமும் நமது அயலார்களை மன்னிப்போமா?

18.  06.03.2013 சட்டமிட்டு குற்றத்தை குறைப்பதைவிட மனதைக்கட்டுப்படுத்தி மாண்புடன்; வாழ்வோம்;
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன் என இயேசு பைபிள் கூறும் பகுதி  இன்று நமக்கு தரப்படுகின்றது. இவ்வாறு இயேசு கூறியபோது யூத மரபில் தாம் வேரூன்றியிருப்பதை அவர் சுட்டிகாட்டினார். திருச்சட்டம் என்பது யூத மக்களுக்கு மோசே வழியாக வழங்கப்பட்டது. இறைவாக்கு என்பது கடவுளின் திட்டத்தை மக்களுக்குக் கடவுளின் பெயரால்எடுத்துரைத்த இறைவாக்கினரின் போதனையைக் குறிக்கும். இயேசுவின் இப் போதனையின் நோக்கம், சட்டத்தையும் இறைவாக்குகளையும், உடைப்பதோ மாற்றுவதோ அழிப்பதோ அல்ல மாறாக அதன் நோக்கத்தை முழுமை பெறச் செய்வதே. சருகை மிதிக்கும் போது ஓலமிடும் நம் சமுதாயம், பசை உள்ளவன் பசுமரத்தை வேரோடும் விழுதோடும் அழிக்கும்போது மௌனம் சாதித்து விடுகிறது. நீதிக்கு சேதனை வரும்போது நீதி தேவதை கண்ணை கருப்புத்துணியால் இருகக் கட்டிக்கொள்கிறாள். சட்டம் தன் பாதையில் சறுக்காமல் செல்லும் என்று நறுக்கென சொல்லி நாசுக்காக நழுவிவிடுவர் சட்டம் படித்தவர்கள். சட்டம் ஒரு இருட்டறை என்று இலக்கணம் பேசி தமக்கு மட்டும் விடியல் தேடிக்கொள்வர் சட்டவல்லுனர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்களையெல்லாம் கடைந்து வடித்தெடுத்து உருக்கொடுத்தவை, கொடுப்பவை தான் இயேசுவின் போதனைகள். அவை சட்டங்களைக் கடந்தவை. வெளி வேடங்களைவிட உள்ளத்து உணர்வுகளை முறைப்படுத்துபவை. மனிதனின் உடலை அல்ல. உள்ளத்தை உருவாக்குபவை. ஆகவேதான், கொலையைச் சட்டமிட்டு குறைப்பதை விட, கோபத்தைக் களையச் சொல்லுகிறார். சட்டம்போட்டு விபசாரத்தை தடுப்பதைவிட, மனதைக்கட்டுப்படுத்தி மாண்புடன்; வாழச் சொல்லுகிறார் இயேசு. மதத்தைக் காப்பாற்ற மனிதனைக்கொல்லும் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் இயேசுவின் தீவிரமும், அவனுள் இருக்கும் தெய்வீகத்தை நிறைவுரச்செய்வதற்காகவே. இயேசுவின் இப்புனித பணி தொடர்ந்தால் மட்டுமே சிறியவர்கள், சார்ந்து வாழ்பவர்கள், சக்தியற்றவர்கள், பாதுகாக்கப்படுவர், சட்டத்தால் பயன்பெறுவர்.அப்போது சட்டம் நிறைவேறும். சட்டத்தால் நிறைவு பெறுவர். இயேசுவின் பணியில் குரல் கொடுப்போம்.

19.    07.03.2013 எந்த நிமிடமும் விழிப்பாயிருப்போம்.
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

“வலியவர் ஆயுதம் தாங்கி தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்”என்று பைபிளில் இயேசு கூறும் பகுதி இன்று நமக்கு தரப்படுகின்றது இவ் வரிகளை இன்று சிந்திப்போம்.
நாம் வாழும் இந்த உலகமயமாக்கல் கொள்ளைக்குள் நமது ஆன்மீக வாழ்வு ஒரு போராட்டம் நிறைந்த வாழ்க்கையாகவே அமைகிறது. நமது ஆன்மீக வாழ்வும், ஆன்மீக உடைமைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால் நாம் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்ச்சிக்கும் சிங்கம் போன்ற அலகை நம்மைத் தாக்கி, நமது படைக்கலங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு, நம் வாழ்வையும் பங்கிட்டுக்கொள்வான். எனவே, நாம் “ஆயதம்” தாங்கி நம் வாழ்வைக் காத்துக்கொள்ளவேண்டும். எந்த “ஆயதம் ” தாங்கி? பல்குழல் அல்ல படைத்தவர் தந்த இறைவார்த்தை ஓர் ஆயுதம். நாம் செய்யும் அன்புச் செயல் என்பது இன்னொரு ஆயுதம். செபம் என்பது மற்றொரு ஆயுதம். இறைநம்பிக்கை என்பது இன்னொரு ஆயுதம். இந்த ஆன்மீக ஆயுதங்கள் தாங்கி, நம்மைக் காத்துக்கொள்வோம் இல்லாவிட்டால், நம்மைவிட வலிமைமிக்க அலகை நம்மைத் தாக்கி வெல்வான். பிளவுபடும் எதுவும் அழிந்துவிடுவது உறுதி. அது குடும்பமாக இருக்கலாம். தனி மனிதனாகக்கூட இருக்கலாம். நிலவரம் அதுதான். பிளவு, பிரிவினை என்று வந்தால் இரண்டு பேருமே சிதறி அழிவது மறுக்கமுடியாத உண்மை. கடவுளும் வேண்டும் சாத்தானும் வேண்டும் என்ற இருமனம் இருந்தால் குழப்பத்திற்கு குறை இருக்காது. நியாயத்தை செய்யவேண்டும், அநீதிக்கும் ஆமாம் போட வேண்டும். கெடுவது உறுதி. உண்மையைச் சொல்ல வேண்டும், பொய்மைக்கும் தலையாட்டுவது இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். நல்லதை. உண்மையை. நீதியை, இயேசுவை பற்றிக்கொண்டு நமக்குள் பிரிவினை உண்டாக்காது வாழ்வோமாயின் வாழ்வில் நிம்மதியும் வெற்றியும் நம்மோடு இருக்கும். இயேசுவின் வார்த்தை உண்மையானது.

20.    08.03.2013 பிறருக்காக எம்மை மறப்போம்
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

“உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று பைபிளில் இயேசு கூறும் பகுதி இன்று நமக்கு தரப்படுகின்றது. எனக்கு அறிமுகமான ஒருவர் கூறிய சம்பவத்தை இந்த இடத்தில் பகிர்வது நல்லது: “நான் சிறுவனாக இருந்து ஒருமுறை கிணற்றில் விழுந்து வெயியே வந்தபின் என் தாய் என்னை அரவணைத்துக் கொண்டு “இவன் எனது பிள்ளை,”என்று சொல்லி அரவணைத்தாள். மழலை பருவம் முடித்து, பள்ளியில் பயிலும்போது, என் அருகில் இருந்தவன், என்னை சுட்டி காட்டி, இவன் என் உற்ற நண்பன் என்றான். குருமட கல்லூரியில் காலடி வைத்த நாள் முதல், இவன் எனது ஊரைச்சார்ந்தவன், சாதியை சார்ந்தவன், வழிமரபை சார்ந்தவன் என்று ஒவ்வொருவரும் என்னை கூறு போட்டுக் கொண்டார்கள். வெளிளே வந்து நின்மதி தேடி இறைவனடி அமர்ந்து இறைவா, இனிமேல் நான் எங்கு செல்வேன்? என்று கேட்டேன். அதற்கு இறைவன், நீ மீண்டும் அவர்களிடமே சென்று,அவர்களைஅன்பு செய்”என்று சொல்வாதக உணர்ந்துகொண்டேன். என்றார்
எல்லா சமயங்களும் இரண்டு முக்கிய விடயங்களை நமக்கு வலியுறுத்துகிறது. முதலாவது முழு இருதயத்தோடு இறைவனை அன்பு செய்வது. இரண்டாவது நம்மை நாம் நேசிப்பது போல அயலானை நேசிப்பது. புனிதனாக இருக்க வேண்டியதில்லை மனிதனாக வாழ்ந்தாலே அது புனிதம்தான். அதற்கு இந்த இரண்டு விடயங்களும் உறுதுணையாகின்றன. முயற்சி செய்வோம் சாதிகளை, சமயங்களை கடந்து ஆண்டவரை, அயலானை அன்புசெய்வோம். எம்மை பற்றியோ, உலகம் பேசும் வசைமொழிகளை பற்றியோ கவலைபடாமல், அன்பு கொண்ட பணியாற்றுவோம். அடுத்திருப்பவர் வேதனையில் வாடும்போது, நமது நேரத்தை கருதாமல், ஆறுதலான வார்த்தைகளால் தேற்றுவோம். இறுதியாக சில நாட்களுக்க முன் நான் படித்த இருவரிகள்: “குழசபநவ லழரசளநடக கழச ழவாநசள யனெ ழவாநசள றடைட நெஎநச கழசபநவ லழர”–பிறருக்காக உன்னை மறக்கின்றபோது, அவர்கள் ஒருபோதும் உன்னை மறப்பதில்லை. முடியும்பவைமுயற்சி செய்வோம்


21.    09.03.2013 நம் செபங்கள் உறவை வளர்க்கும், உறுதிப்படும் செபமாக இருக்கட்டும்  
   ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன. ஏன்று இயேசு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது. இயேசுவின் ஆன்மீக ஆழம் மற்றும் அவரது படைப்பாற்றலுக்கு அழகியதோர் எடுத்துக்காட்டாக அமைகிறது நாம் வாசிக்கும்; இறைவேண்டல் பற்றிய இப்பகுதி. செபம், இறைவேண்டல் எவ்வாறு இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கக்கூடாது என்பதை இதைவிட அழகாக யாரும் கூறிவிடமுடியாது என்னும் அளவுக்கு இயேசுவின் உவமைவழி போதனை அமைந்திருக்கிறது. இயேசு சொன்ன செபம் பற்றிய இந்த உவமை நம் கண்களைத் திறக்க, எச்சரிக்கை விடுக்கும் ஓர் அபாய மணி. இறைபுகழ்ச்சியும், நன்றியும், நோன்பும், பத்திலொரு பங்கு காணிக்கையும் பயனற்றதாக மாறிவிடும் என்று உணர்த்தும் அருமையான உவமை. உவமையின் முன்னுரையே செய்தியைத் தெளிவாகப் பறைசாற்றிவிடுகிறது.“தாங்கள் நேர்மையாளர்கள் என்று நம்பி, மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்”.
பல சமயங்களில் நாம் செபம் செய்கிறோம். பல விதமான செபம் செய்கிறோம்.பல முறைகளில் செபிக்கிறோம். நம் செபங்களிலெல்லாம் அதன் நோக்கம், உட்பொருள் ஒன்றே. இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை வளர்ப்பதும் வலுப்படுத்துவதும் அதன் நோக்கம் தவிர பிறிதெதுவும் செபத்தின் இலக்கு அல்;ல. எனவே நாம் செபிக்கும்போது நம் செபங்கள் நமக்கும் இறைவனுக்குமுள்ள உறவையும் நமக்கும் நம் அயலானுக்குமிடையே உள்ள உறவை வளர்க்கின்றதா என்பதில் கவனம் தேவை. ஊவமைகதையில் வரும் பரிசேயரின் செபம் தன்னை உயர்த்தும் செபம். தன்னைப்பற்றிய தப்பட்டம்.தன்னைப் புகழ்ந்து பெருமைப்படுத்தும் செபம். அடுத்தவனை இழிவுபடுத்தும் செபம். இறை உறவையோ மனித உறவையோ வளர்க்கும் செபம் அல்ல. வரிதண்டுபவனின் செபம் தன்னுடைய பலவீனம், இயலாமை,வெறுமை, தாழ்ச்சி, சார்புநிலை இவற்றை அடிப்படையாகக் கொண்டு உறவை வளர்க்கும் செபமாக இருந்ததால் இயேசுவின் பாராட்டைப் பெறுகிறார். நாமும் இவ்வாறு குடும்பமாக செபித்தால், குடும்பத்தில் உறவு உறுதிப்படும். ஆண்டவனின் ஆசீர் குறைவின்றி கிடைக்கும். நாம் உயர்வடைவோம். உயர்த்தப்படுவோம்.

22.    11.03.2013 நம் வாழ்விலும் இந்நம்பிக்கை முக்கிய இடம் பெற வேண்டுவோம்.
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

ஒரு அரச அலுவலர் இயேசுவிடம் சென்று,'ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் ' என்றார். இயேசு அவரிடம், ' நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.அவர் போய்க் கொண்டிருக்கும்போதே அவருடையபணியாளர்கள் அவருக்குஎதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக் கொண்டான் என்று கூறினார்கள். என கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது.
வெளிநாட்டு கலாசார தாக்கம், இன்று நம் நகரங்களில் பரவி,கிராமங்களுக்கு ஊடுறுவிக் கொண்டிருக்கிறது. இதனால் பெற்றோர் பலர் நொந்து நொடிந்து போய்கொண்டிருக்கிறார்கள். கலாசார சீர்கேடு, என் மகனை,மகளை நான் இழக்கச் செய்துவிடுமோ ஆலயம்தோறும், 'ஐயா, என் மகனை மகளை இழக்குமுன் வாரும் என்று எத்தனையோ பெற்றோரின் வேண்டுதல்கள் தினம் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இளமையின் வேகத்தில் பெற்ற தாய் தகப்பனை மறந்து, பாலுட்டி தாலட்டி துக்கித்திரிந்த பெற்றோரை மறந்து. ஒட்டி, ஊட்டி உறவாடிய பந்த பாசத்தை மறுத்து, வாழ்வின் விளிம்பில் நின்று, சாவின் பள்ளத்தாக்கில் இறங்க காத்துக்கொண்டிருக்கும் மகளுக்காக மகனுக்காக, ஐயா, என் மகன் மகள் இறங்குமுன் வாரும்" என்று விண்ணப்பிக்கும் பெற்றோர்களின் அழுகுரல்கள் இன்று ஆலயங்களை நிரப்புகின்றன.
எத்தனையோ விதவிதமான விசித்திரமான காரணங்களால் இன்று நம் மகள்கள், மகன்கள், உடலில், உள்ளத்தில், பொருளாதாரத்தில், ஆன்மீகத்தல், குடும்ப வாழ்வில், அரசியலால் இறந்துகொண்டிருக்கிறார்கள். பெற்றோர் பலர், ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" 'ஐயா, என் மகனை மகளை நாம் இழக்குமுன் வாரும். ஐயா, என் மகன் மகள் இறங்குமுன் வாரும்" என்று அபயக் குரல் எழுப்பி, கோயில் குளம் என்றெல்லாம் அலைந்து, கௌரவம் பாராது, காவி அணிந்து, மொட்டை அடித்து, கால்நடையாய், அலுவலன் தன் மகனுக்காகக் கெஞ்சி கதறியதுபோல வாழும் பெற்றோரைப் புரிந்துகொள்வோம். அரச அலுவலர் இயேசு சொன்ன வார்த்தையை நம்பி புறப்பட்டுப் போனார். அவரது நம்பிக்கை நலமளித்தது. நம் வாழ்விலும் இந்நம்பிக்கை முக்கிய இடம் பெற வேண்டும்.

23.    12.03.2013 நம்பிக்கை கொள்வோம். தயாராக இருப்போம்.
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, ' நலம்பெற விரும்புகிறீரா? 'என்று அவரிடம் கேட்டார். எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் என்று இயேசு அவரை குணமாக்கும்  பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது.
பல வகையில் நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தேடி வந்து தங்களைக் குணப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள் என பைபிளில் நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கிறோம். ஆனால் இந்நற்செய்தி பகுதியில் 38 ஆண்டுகளாய் உடல் நலம் குன்றியிருந்தவரை இயேசு கண்டு நலம் பெற விரும்புகிறீரா என்று கேட்கிறார். வாழ்நாளில் பெரும்பகுதியை நோயினால் இழந்துவிட்ட மனிதரும் நிறைவாழ்வு வாழ வேண்டுமென்பது இயேசுவின் விருப்பம். நலமற்ற மனிதரிடம் நலம்பெற வேண்டும் என்னும் விருப்பம், ஆர்வம், அதற்கேற்ற நம்பிக்கை இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தபின்னரே, அந்த மனிதரைக் குணமாக்க இயேசு முன் வருகிறார். நலம் பெற விரும்புகிறீரா? என்று அந்த மனிதரிடம் கேட்டு, அவருடைய விருப்பத்தையும், நம்பிக்கையையும் அறிந்த பின்னர் அவரைக் குணப்படுத்துகிறார்.
இன்று எமக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்த கேள்வி தேவைப்படுகிறது. இத்தவக்காலத்தில் நாம் நலம் பெற விரும்புகிறோமா, மனமாற்றம் அடைய விரும்புகிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்வோம். மனமாற்றத்திற்கான அடிப்படை ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிட்டால், மனமாற்றத்தை இறைவன் எப்படித் தருவார்? நாம் விரும்புவோம், நம் விருப்பத்தை அறிக்கை இடுவோம். சில சமயங்களில் ஆண்டாண்டாக துன்பம் நம்மை தொடர்ந்து வரலாம். ஆம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அடுத்தவனோடு போட்டிபோடவும் நமக்கு துணிவு, திறமை, வசதி இல்லாமல் இருக்கலாம். நல்லவர்கள் நாலுபேர் நமக்கு உதவி செய்ய முன்வராமலிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். மனம் சோர்ந்து போக வேண்டாம். தெய்வம் எம்னைத் தேடிவரும் அந்த நேரத்திற்கு தயாராக இருப்போம். கடவுள் எம்மிடம் நலம்பெற விரும்புகிறீரா? என்று கேட்கும்போது எம் உடலும் உள்ளமும் தயாராக இருக்கட்டும். இயேசு நமக்குத் எல்லாம் தருவார். நம்பிக்கை கொள்வோம். தயாராக இருப்போம்.

24.    13.03.2013நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழ்வோம்.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

“என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்” என இன்று எமக்கு தரப்படும் பைபிள் பகுதியை பார்த்தால் இயேசு இறை தந்தையைப் போல வாழ்ந்தார், தந்தையைப் போல செயலாற்றினார். இவ்வாறு செயலாற்றியதனால்தான், அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக யூதர்கள் இயேசுவைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள். நம் இறைதந்தைக்கு ஓய்வு தேவையில்லை. அவர் ஓய்வின்றி தமது பேரன்பை, இரக்கத்தை நம்மீது பொழிந்துகொண்டிருக்கிறார். இயேசுவும் ஓய்வின்றி உழைத்தார். ஓய்வு நாளிலும் நோயாளர்களைக் குணமாக்கினார், பாவிகளை மன்னித்தார். ஓய்வுநாளிலும் இறைவன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே ஓய்வுநாளிலும் மீட்பின் பணியைச் செய்வதாக இயேசு உறுதியாக கூறுகின்றாh.;  நன்மை செய்வதற்கு ஏது ஓய்வு? நாமும் நற்பணியாற்றுவதிலும், நேர்மையானவற்றைச் செய்வதிலும், ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

சிலுவையில் இயேசுவை அறையத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இயேசு தன்னை தந்தை இறைவனுக்கு இணையாக்கினார் என்பது. தந்தை இறைவனும் இயேசுவும் ஆள்தன்மையில் மட்டுமே வேறுபட்டவர்களாயினும் சிந்தனை, செயல்பாடு அனைத்திலும் ஒன்றுபட்டவர்கள் என்பது “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்" என்று இன்று எமக்கு தரப்படும் பைபிள் பகுதியையும் நோக்கும்போது புலப்படுகின்றது. இயேசுவின் பணி, நம்மை தமது சகோதரார்களாக்கி, தந்தை இறைவனின் அன்புக் குழந்தைகளாக்குவது. இவ்பணியில், தன் இறைத்தன்மையையும் தன் உறவையும் உறுதிப்படுத்துகிறார். தாம் தந்தை இறைவனின் அன்பு மகன் என்னும் உறவை வெளிப்படுத்தி,மனிதர் அனைவரையும் தன் சகோதரர்களாக்கும் இலட்சியத்தில் தன்னை முழுவதும் கையளிக்க முன்வருகிறார். யாரையும் தீர்ப்பிடவோ, தண்டனைக்குள்ளாக்வோ, அழிவைச் சந்திக்கவோ, தந்தை மகன் என்ற உறவை இழந்துவிடவோ அவர் விரும்பவில்லை. அனைவரும் வாழ்வு பெற வேண்டும் என்பதே அவர் விருப்பம். அனைவரின் வாழ்வுக்கும் ஊற்றாய் அமையவே விரும்புகிறார். நாமும் நம்மை இயேசுவோடு இணைத்துக்கொள்வோம். நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழ்வோம்.

25.    14.03.2013 மனிதம் வாழவேண்டுமெனில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சொல்லித்தந்த பாடங்களை இவ்வுலகம் கேட்பது மிகவும் அவசியம்    

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

“என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும் ” என்னும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. திருத்தந்தை16ம்பெனடிக்ட் தனதுபொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தபோது பலதலைவர்கள் அவர் அறிவித்த முடிவைப்பற்றி கருத்துக்கள் கூறியவண்ணம் உள்ளனர். “நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதிநாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்” என்றுதந்தை தன்னிடம் ஒப்படைத்த பணியை நிறைவாக செய்து விட்டதாகவே எண்ணியிருக்கலாம். திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புரட்சிகரமான இந்த அறிவித்ததைக் குறித்தும் கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இக்கருத்துக்களில் ஒன்று, இறை பக்தியோ, மத நம்பிக்கையோ இல்லாத ஒரு மனிதநேயப் பணியாளரும் இந்தியாவின் வாரணாசி நகரில் மனித உரிமைபற்றிய மக்களின் கண்காணிப்புக் குழு என்ற அமைப்பை நடத்தி வருபவர் டுநnin சுயபாரஎயளொi என்;பவரது கருத்தை இங்கு நோக்குவது நல்லது. இவர் யுளயை நேறள என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள்; தன் சொந்த வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும் அழகாகக் கூறியிருந்தார்: “நான் பிறந்தது இந்து மதத்தில். அங்கு நிலவிய சாதியப் பிரிவுகளையும், தலித்மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டையும் கண்டு, மதத்தையும், இறைவனையும் நான் வெறுத்து ஒதுக்கினேன். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இறைவன், மதம் என்ற எண்ணங்களை மீண்டும் என் மனதில் விதைத்தார். இவர்; வறுமை, பட்டினி, சமூக அநீதி ஆகியவற்றைப் பற்றி துணிவுடன் பேசினார். ஐ.நா.பொது அவையில்18.04.2008ஆற்றிய உரையைக் கேட்டேன். உலகில் நிலவும் பல பிரச்சனைகளின் ஆணிவேர் மனித உயிர்களுக்கு நாம் வழங்க மறுக்கும் மதிப்பு என்றும், மனித மதிப்பும் மனித உரிமையும் நிலைநாட்டப்பட்டால், பல பிரச்சனைகள் தீரும் என்றும் அவர் சொன்னது என்னை அதிகம் கவர்ந்தது.” அவர் தன் உரைகளில் கடவுளைப்பற்றி பேசியபோது, கடவுளை நான் வெறுத்து ஒதுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே, கடவுள் மறுப்பாளி என்ற நிலையிலிருந்து பகுத்தறிவாளி(யுபழெளவiஉ) என்ற நிலைக்கு நான் மாறக் காரணம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே. இன்று நான் கிறிஸ்துவ மறையில் ஒருவித ஈடுபாடு கொண்டிருப்பதற்குக் காரணம், இயேசு கிறிஸ்துவைப் பற்றி திருத்தந்தை கூறிய கருத்துக்களே" என்று திருத்தந்தையைப்பற்றி புகழ்ந்து தன் பேட்டியில் கூறியுள்ளார். அத்துடன் தொடந்துபேட்டியில் டுநnin சுயபாரஎயளொi  அழுத்தந்திருத்தமாய் கூறிய ஒரு கருத்தை நாம் மீட்டிப்பார்கலாம்: 'மனிதம் எதிர்காலத்தில் வாழவேண்டுமெனில், ஆன்மீகத் தலைவரான இந்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட சொல்லித்தந்த பாடங்களை இவ்வுலகம் கேட்பது மிகவும் அவசியம்" எனவே நாமும் தந்தையைப் போல பலரை கடவுள் பக்கம் திருப்புவோம். பலர் எம்மை பற்றி சான்று பகர நாம் வாழ்வோம்


26.    15.03.2013 '"பிறரைபற்றி அவதூறு கூறும் வாய்ச்சொற்களைக் குறைப்போம், அவர்கள் பற்றிய வாய்மையைக் குறைக்காதிருப்போம.;

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

'இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?" என்று இன்று பைபிளிலிருந்து எமக்கு தரப்படுகின்ற  பகுதியை நோக்கும்போது இயேசு சாவுக்கு அஞ்சியவர் அல்லர், இருப்பினும் எப்படிச் சாகலாம் எனத் தற்கொலை உணர்வுடன் வாழ்ந்தவரும் அல்லர் என்பது புலனாகுகிறது. ஆகவேதான், 'யூதர்கள் அவரைக்கொல்ல வழிதேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவில் நடமாட விரும்ப வில்லை. எருசலேம் திருவிழாவுக்கு இயேசுவும் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்". அதேவேளையில் எருசலேமில் அவர் ஒளிந்து திரியவுமில்லை. வேண்டிய வேளைகளில் அவர் கோவிலில் உரத்த குரலில் போதித்தார். எனவேதான், 'இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ, இங்கே இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே? யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே" எனமக்கள் பேசிக்கொண்டனர். நாம்; பலநேரங்களில் அடுத்தவர்களைப் பற்றித் உள் ஒன்றுவைத்து புறமாக அவதூறு, தரக்குறைவாகப் பேசுகிறோம். ஏன்எம்மிடம் இந்த வெளிப்படையாகப் பேசும் நிலை இல்லாது போனது? இறைவனிடம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுவோம். பிறரைபற்றி அவதூறு கூறும்  வாய்ச்சொற்களைக் குறைப்போம், அவர்கள் பற்றிய வாய்மையைக் குறைக்காதிருப்போம.;

மக்கள்கும்பல் எங்கு கூடும், கோயில் திருவிழா எப்பொழுது கொண்டாடப்படும் என்ற யூதர்களும் பரிசேயர்களும் காத்துக்கிடந்தது போல, இன்று நாம் வாழும் இந்த சமுதாயத்தில் எங்களைத் துன்புறுத்த திட்டமிட்டு, வாய்ப்பு தேடி பலர் காத்திருப்பர். எம்மை அவமானப்படுத்த, எமக்குப் பொருள் இழப்பு ஏற்படுத்த, எம்மைத் தனிமைப்படுத்தி மனவேதனை கொடுக்க எம் எதிரிகள் காலம் காலமாக, ஆண்டு ஆண்டாக காத்திருக்கலாம், முயற்சி செய்யலாம். அழிவு செய்ய பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் எம் பகைவர்கள் திட்டமிடலாம். இப்போது காலங்கள் தங்களுடையது என அவர்கள் எண்ணலாம். நூம் இ அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் நேரமும் நிமிடமும் இறைவனுடையது. கடைசி துளியும் எம் இறைவனுடையது. அதுவரை நீ தொடர்ந்து போராடலாம். கடைசி நேரத்தில், நிமிடத்தில் உன்னைக் காப்பார். ஆகவே யாரும் உங்களைத் தொடமுடியாதுஆனால் இயேசுவைப் போல, நாமும் அச்சமற்றவர்களாய், தேவையின்றி ஆபத்தான பணிகளில் ஈடுபடடாமல் பணியாற்றுவோம். நன்மைகளைச் செய்து, நல்லவைகளுக்கும் நற்செய்திக்கும் சான்று பகர்ந்து வாழுவோம். நமக்கென இறைவன் குறித்த நேரம் வரும்வரையில் யாரும் நம்மைத் தொடமுடியாது. எம் நேரம் வரும்வரை யாரும் எம்மை  தொட எம் தேவன் அனுமதிக்கமாட்டார்.

27.    16.03.2013     பிறரைத் பொய்மையின்படி தீர்ப்பிடாதபடி எச்சரிக்கையாய் இருப்போம்
  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

'மெசியா (இயேசு) இவரே" என்று சிலர் கூற மற்றும் சிலர், 'கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின்; மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?" என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் 'யாரும் அவரைத் தொடவில்லை" மாறாக'அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்." என்று இன்று பைபிளிலிருந்து எமக்கு தரப்படுகின்ற  பகுதியை நோக்கும்போது ஒரு இறை மனிதனைத், ஆண்டவனின் அடியானைத், உண்மைக்கும் நீதிக்கும் சாட்சியாக வாழும் மனிதனைத், நற்செயல் செய்து வாழும் நல்லவனைத் தொடுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்று எமக்கு நன்கு புலப்படம். எதிரிகளிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். இயேசு கலிலேயரா, யூதரா? பெத்லகேம் மெசியாவா, நசரேத்து இயேசுவா? சட்டமும் காவல்துறையும் அதிர்ந்து போய்விடும். இயேசுவை கைது செய்யச் சென்றவர்கள் 'அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை" என்ற அதிர்ச்சி தகவல் கொடுத்தனர். நாம் நல்ல வாழ்வு வாழும்போது எங்கள் தூய வாழ்வை, நற்செயல்களைக் காண்போர்,எங்களுக்குச் சான்று பகர்வர். சான்றோர், பெரிய மனிதரகள் எங்கள் சார்பில் பேசுவார்கள்.

'ஒருவரின் வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?"என்று நிக்கதேமு கேட்கும் பகுதியும் பின்பு இன்றைய பைபிள் பகுதியாக தொடர்கின்றது. நிக்கதேம் ஒரு பரிசேயர், நல்லவர், நீதிமான். இவர் இயேசுவின் விசாரணையில் இவ்வாறு கேட்பதன் மூலம்  நிலை தடுமாறும் நீதிக்கு ஒரு ஊன்றுகோல் வழங்கினார். பல நேரங்களில் என்ன நடந்தது என்பதைத் தொடர்புள்ள மனிதரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல்,வதந்திகளையும், அவதூறுச்செய்திகளையும் எளிதில் நம்பவைத்து ஏன் உண்மைகளையே மறைத்து பொய்மைகளையே உலகிற்கு உண்மையாக்க முனையும் எமக்கும் உண்மைஉரைப்பவர்களை உலகிலிருந்து அகற்றதுடிக்கும் எமக்கு ஓர் எச்சரிக்கையாக அமைகின்றன இந்த நிக்கதேமுவின் வார்த்தைகள். நீதி நேன்மையின் படி வாழும் போது. எங்களுக்கும் ஒருவர் உதவிபுரியவருவார். இயேசுவுக்கு நிகழ்ந்தது போலவே எங்களுக்கும் நிகழும். எதிரிகளிடையே கருத்து வேறுபாடு உண்டகும். எங்களை வழிநடத்துவதாக தம்பட்டம் கூறி எங்களிடையே வாழும் தலைவர்கள் ஒவ்வொருவரும் வாய்பொத்தி அவரவர் வீட்டுக்குச்செல்வார்கள். எவரும் எங்களைத் தொடமாட்டார்கள். எனவே, பிறரைத் பொய்மையின்படி தீர்ப்பிடாதபடி எச்சரிக்கையாய் இருப்போம். பாவத்திலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்வோம்

28 18.03.2013'"இன்னொரு மனிதரை சொந்த நலனுக்காக பயன்படுத்துவதை விட்டுவிடுவோம்.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

'விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்ட ஒரு பெண்ணை கொண்டுவந்து இப்படிப் பட்டவர்களைக் கல்லால்எறிந்து கொல்லவேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று இயேசுவின்மேல் குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக அவரிடம் இவ்வாறு கேட்டு மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மடக்கிவிட சோதித்தார்கள். என்னும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. வாழ்க்கையில் வரும் சவால்களைப் பலவழிகளில் சந்திக்கலாம். சவால்களைக் கண்டதும் ஓடிஒளித்தல். கோபத்தோடு அவைகளை எதிர்கொள்ளல்,  நிதானமாய், ஆரஅமர சிந்தித்து தெளிவான வகையில் அவைகளைத் தீர்த்தல். மனநல நிபுணர்கள் இன்னும் பலவழிகளைச் சொல்லித் தருவார்கள். நமக்கு இயேசு என்ன சொல்லித் தருகிறார் என்று பார்ப்போம். அவர் சவால்களைச் சந்தித்த விதம், சமாளித்த விதம் அழகானது. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏன்? அவர்கள் இயேசுவை எப்படியும் மடக்கி, அடக்கி விடலாம் என்ற கற்பனையில் அவருக்கு விடுத்த சவால்கள் இயேசுவிடமிருந்து அற்புதமான சொற்களை, செயல்களை வெளிக் கொணர்ந்தன. தீர்ப்பிடுவதற்கு ஒரு தகுதியும் கண்ணியம் இருக்க வேண்டும். பட்டமும் பணமும் பதவியும் அல்ல அந்த தகுதி. 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என இயேசு கூறும்; இப்பகுதி, தீர்ப்பு அளிக்க வேண்டாம் என்பதைவிட, தீர்ப்பு அளிப்பதற்கானத் தகுதியை முன் நிறுத்துகிறது. கடவுளின் முன்னிலையில், பிறருக்குத் தீர்ப்பு அளிக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று சிந்திப்பது நலம்.

இயேசுவை எப்படியும் மடக்க வேண்டும், அடக்க வேண்டும். இதுவே அவர்களது வாழ்க்கைப் பிரச்சனையாகப் போய்விட்டது. அவர்களது சதிக்கு பயன்படுத்திய பகடைக்காய் அந்தப் பெண். இன்னொரு மனிதரை சொந்த நலனுக்காக பயன்படுத்துவதை விட பெரிய பாவம் உலகில் இல்லை என்று கூறலாம். ஆழமாய் அலசிப் பார்த்தால், நாம் பாவங்கள் என்று பட்டியலிடும் பல செயல்களில் இறுதியில் இந்த ஒரு உண்மைதான் பின்னணியில் இருக்கும். மற்றொரு மனிதப் பிறவியை நம் சுயநலத்திற்குப் பயன்படுத்துவது, பலியிடுவதாக அமையும். குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. ஆனால், எந்த நேரமும் எந்த நிலையிலும் அன்பு ஒன்றையே வாரி வாரி வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது பெரிய சவால்.இந்த வாழ்வைத் தான்;. இயேசுவும் விரும்புகிறார்.

29 19.03.2013 பணிவுப் பண்பிற்கு பெற்றோராகிய நாம் முன்மாதிரி காட்டுவோம். 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவை காணாததால் அவரைத் தேடிக்கொண்டு பெற்றோர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். என்னும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. பணிவை,தாழ்ச்சி, கீழ்ப்படிதல் போற்றவற்றிற்கு இலக்கணத்தை குழந்தை இயேசுவும் தனது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டார் என்று நாம் இங்கு கூறலாம். எனவேதான், இந்தப் பணிவு இறுதி வரையில்,அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தி, கீழ்ப்படிது முன்மாதிரிகாட்டினார். பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்திருக்க, கீழ்ப்படிய வேண்டும் என்னும் கட்டளை இன்று பெற்றோர் சிலர் பார்கின்ற விதமே தனியானது. இதனை மேற்கோள் காட்டிச் அவர்கள் குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துகின்ற போக்கு எம்மிடையே ஆங்காங்கே உள்ளன. இதனை நாம் வண்மையாக கண்டிக்கலாம். ஏனென்றால், மனிதர் பெரியவரானாலும், சிறியவரானாலும் அவர்களுக்கும்; கடவுளே வழங்குகின்ற மனித மாண்பு உண்டு. அதை யாரும் அழித்துவிடவோ எடுத்துவிடவோ இயலாது. சிறுவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவற்றை யாரும் மீறலாகாது. பிள்ளைகளை  தங்களுக்கு பணிந்திருக்க வேண்டும் என்ற வெறியோடு பிள்ளைகளை நடித்தி மனம் மகிழும் பெற்றோரை நாம் பார்;கின்றோம். சாதியத்தில் உண்றிப்போன பெற்றோரின் கௌரவத்தலால் தங்கள் பிள்ளைகளின் வாழ்வை சீர்குலைத்து, தங்களை; பிள்ளைகள் எரிந்து தற்கொலை செய்யும் அளவிற்கு நடக்கும் பெற்றோரையும் நாம் பார்கின்றோம், அதனை தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு பணிந்;திருக்;கிறார்கள் என் பிறரிடம் புகழ்வோரையும் நாம் காண்கின்றோம். பிள்ளைகள் தங்களுக்கு பணிந்திருக்கவேண்டும்; என்ற எண்ணக்கருவை இவ்வாறு பாழாக்கும் பெற்றோரும் எம்மிடையே உண்டு என்பதை நாம் மறந்துவிடலதகாது. உள்ளார்ந்த பணிதலும் கீழ்ப்படிதலும் மனிதர் யாராயிருந்தாலும் இன்றியமையதது. நாமும் இந்தப் பணிவை கற்றுக்கொள்வோம். பணிந்த உள்ளத்தினராய் வாழ்வோம். இயேசு தம் விண்ணகத் தந்தைக்குப் பணிந்து வாழ்ந்தர். பிள்ளைகள் பணிவு, கீழ்ப்படிவு என்னும் பண்பை பெற்றுக்கொள்ள பெற்றோராகிய நாம் எம்வாழ்வால் அவர்களுக்க முன்மாதிரி காட்டுவோம். 

30.  20.03.2013 '"; சுய நல அடிமையிலிருந்து  விடுதலை பெற்றுக்கொள்வோம்
  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்"; என்னும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. இப்பகுதியில் இயேசுவுக்கும், யூதர்களுக்கும் இடையே விடுதலை-அடிமைத்தனம் பற்றிய காரசாரமான உரையாடல் நடப்பதை நாம் பார்கின்றோம். உண்மை என்பது இரண்டு பொருள்பட பைபிளில் காணப்படுகின்றது: சொல்லில், சிந்தனையில், செயல்பாட்டில் நேர்மை, வாய்மையை இதனையே உண்மை என்று அறிவோம். நமது பேச்சிலும், செயலிலும், மனநிலையிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் எந்தவித குற்ற உணர்வும் இன்றி, அக விடுதலை அடைந்தவர்களாக வாழலாம். இவ்வாறு, உண்மை நமக்கு விடுதலை அளிக்கிறது.

இயேசுதான் உண்மை என்பது மற்றய பொருள்: 'நானே வழியும், ஒளியும், உண்மையும்" என்றார் இயேசு. இயேசுவே உண்மை. எனவே, இயேசு நமக்கு விடுதலை தருகிறார். இந்த விடுதலை உடல், உள்ள, ஆன்மா தழுவிய முழு விடுதலை. அகவிடுதலை மற்றும் புறவிடுதலை இணைந்த ஒரு விடுதலை. இந்த விடுதலை அடைவதற்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். அந்த உண்மையை அவரது வார்த்தைகள் வாரிவளங்குகின்றன.

வரலாற்று உண்மையைவிட, ஆன்மீக-இறையியல் உண்மை ஒன்றும் உண்டு  யூதர்களுடன் சேர்ந்து நாமும் மறந்துவிட்டனர். எனவேதான், இயேசு அதனை நினைவூட்டுகிறார்,"பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று. அந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவே தாம் இந்த உலகிற்கு வந்தார் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார்.இயேசு வழங்குகின்ற விடுதலை பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் நமக்குக் கிடைக்கின்ற விடுதலை. கத்தோலிக்கத்தின் படி, இவ்வுலகில் நிலவுகின்ற எல்லா அடிமைத்தனங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் மூல காரணம் பாவமே. இதற்கு முக்கிய ஊற்றாக இருப்பது நம் சுய நலம் ஆகும். இயேசு இந்த இழிநிலையிலிருந்து நமக்கு விடுதலை தர வருகின்றார். இன்று நாம் பல பாவங்களுக்கும், பழக்கங்களுக்கும், செல்வத்துக்கும், சிலைகளுக்கும் நாம் அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம். இந்த உண்மையை அறிக்கையிட்டு, இயேசுவின் மன்னிப்பையும், விடுதலையையும்; பெற்றுக்கொள்வோம்

31     21.03.2013 '"யார் இந்த இயேசு என்னும் கேள்விக்குப் பதில் காண்போம்
  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

'நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்" என்று யூதர்கள், பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்கும்  பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. இயேசுவின்; காலம்முதல் இன்று வரை 'யார் இந்த இயேசு" என்ற கேள்வி, பலராலும் பலவிதங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கேள்வியும் அதன் பதிலும் மனிதர்களையும் மனித வரலாற்றையும் மாற்றியுள்ளது. 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? " என்று இயேசு கேட்டகேள்வியும் அதற்கு சரியாக பதில் சென்ன சீமோனைப் பேதுருவாக மாற்றி திருச்சபையின் அடித்தளமாக மாற்றியது. விண்ணின் ஆற்றல்,அதிகாரம் மண்ணுக்கு வழங்கப்பட்டது.ஆண்டவரே நீ யார்? என்ற சவுலின் கேள்வியும் அதற்கு அவர் கண்டுகொண்ட பதிலும் அவரை பவுலாக மாற்றியுள்ளது. இதே கேள்வியை எழுப்பி, அதற்குச் சரியான பதில்காணும் இன்றைய மனிதர்களும் இத்தகைய பெரும் மாற்றத்தை, தன்னிலும் தான் வாழும் சமுதாயத்திலும் ஏற்படுத்துகிறார்களா.

இயேசு தான் யார் என்பதை தன் போதனையாலும் அரும்செயல்களாலும் பலமுறை மறைமுகமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் காட்டியுள்ளார். கேட்டவர்கள் வாழ்வு பெற்றார்கள். கேளாதோர் வாழும் வாய்ப்பை இழந்தார்கள். இயேசுவின் கடைசி நாட்களிலும் இந்த கேள்வி எழுகிறது. இயேசுவும் வழக்கம் போல் பதில் கொடுக்கிறார். 'நான் வந்த இடமும் போகுமிடமும் உங்களுக்குத் தெரியாது", 'நான் மேலிருந்து வந்;தவன" 'இருக்கிறவர் நானே",'என்னை அனுப்பிய தந்தை என்னோடு இருக்கிறார்" இயேசு தாம் இறைமகன் என்பதையும், உலகின் தொடக்கமுதல் தந்தையின் நெஞ்சில் வாழ்ந்தவர் என்னும் உண்மை அவர்களிடம் எடுத்துரைத்தார். இந்த விவரங்கள் இந்த கேள்விக்கு போதுமான பதில்களாகின்றன. ஆயினும் அப்பரிசேயர்கள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. எனவே அவர்களில் எந்த மாற்றமும் இல்லை. நாமும் இன்று உலகமயமாக்கலின் சூழ்ச்சிக்குள் விழுந்திருக்கின்றோம். இவை எப்பொழுதும் மனச்சான்றை வலுவிழக்கச் செய்கின்றன, நன்மையானதைக்கூட ஏமாற்றுகின்றன். இதனால்  தவக்காலம் ஆன்மீகப் போரட்டத்தில் போராடுகின்றோம். இவற்றுள் இயேசு குறித்து எழும்  மனிதரின் போலி உருவங்களை புறக்கணிக்க, யார் இந்த இயேசு என்னும் கேள்விக்குப் பதில் காண்போம். மகிழ்ந்து வாழ்வோம்.

32.    22.03.2013 '"நம்மிக்கையில் நலமாய் வாழ்வோம்
  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால் என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; என்றார் இயேசு. இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆயினும் அங்கே வேறு பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். என்னும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. இப்பகுதியை நோக்கும்போது நம்பிக்கை  வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்னது துலங்குகின்றது. இறைச்சக்தியின் வல்லமை அதை நம்புவோரிடம் இருக்கும் என்பார்கள். ஒருமுறை முத்தி பெற்ற அன்னை தெரேசாவிடம், இத்தனை அரிய காரியங்களைச் செய்வதற்குச் சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றது என்று கேட்ட போது, அவர் திருநற்கருணையைச் சுட்டிக்காட்டினாராம்.

1982ம் ஆண்டு நடந்த,சாதனையாகவே கருதப்படுகிறது ஒரு உண்மை சம்பவம் இங்கு பகிர்வது நல்லது என எண்ணுகின்றேன்: ஸ்டீபன் கல்லகன் என்பவர் அட்லாண்டிக் பெருங்கடலில் தனியாக உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார் அப்போது அவரது படகு ஒரு பாறையில் மோதி உடைந்துவிட்டது. ஒரு நாளல்ல, இரண்டு நாட்களல்ல எழுபத்திரண்டு நாட்கள். தன்னந்தனியாக அட்லாண்டிக் கடலில், ஒரு சின்னப் படகில் ஏறி அதுவம் ஒரு ஓட்டைப்படகில் எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஸ்டீபன் கல்லகன், அலைந்து திரிந்தார். அதில் ஒரு ஆள் மட்டுமே அமர இயலும். உண்ண உணவு கிடையாது. படுக்க இடம் கிடையாது. காற்று அடிக்கும் பக்கமெல்லாம்  படகு போகிறது.  கொடும் குளிரும், இருள் நிறைந்த இரவுகளும் தன்னந்தனியான பகல்கள் என்று எழுபத்திரண்டு நாட்கள் கழிந்திருக்கின்றன. இதற்கிடையே அந்தப் படகின் ஓட்டைவழியே தண்ணீர் உள்ளே வர அதையும் மெல்ல மெல்ல வெளியே ஊற்றியிருந்திருக்கிறார். குடிப்பதற்கு கடல் தண்ணீர்தான். கடலில் எப்போதாவது கையில் சிக்கும் மீன்கள்தான் உணவு. இறுதியில், அந்தப் பக்கமாக ஒரு கப்பலில் சென்றுகொண்டிருந்தவர்கள் அவரைத் தற்செயலாகக் கண்டுபிடித்து கரை சேர்த்தனர் அதனால் தப்பியிருக்கிறார். 'எப்படி உங்களால் வாழ முடிந்தது?" என்று ஸ்டீபன் கல்லகனிடம் கேட்டபோது, 'எப்படியும் கரை சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையை வழி நடத்துகிறது" என்று பதில் தந்தார். 'எனக்கு உறுதியூட்டும் இயேசு கிறிஸ்துவால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" எனப்  நம்புவோம். நம்மிக்கையில் நலமாய் வாழ்வோம். 

33  23.03.2013 பிறருக்காக  வாழ இயேசுவின் மாதிரியைப் பின்பற்ற முயல்வோம்
  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

தலைமைக் குரு கயபா அறிவித்த இந்த வார்த்தைகள்:'இனம் முழுதும் அழிந்துபோவதைவிட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது"என்னும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. கயபா கயமை நிறைந்த உள்ளத்தோடு இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், இதனை எழுதிய நற்செய்தியாளர் அதனையும் இறைவாக்காகவே எடுத்துக்கொள்கிறார். மனித இனத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஓர் இனத்திற்காக உயிர் துறந்த தலைவர்கள் பலரைப் பார்க்கலாம். அல்லது ஒரு குடும்பத்தைக் காக்க உயிர் துறந்த தனி மனிதர்களையும் சந்திக்கலாம். அண்மையில் கூட இந்தியாவில்  இல. மணி, முத்துக்குமார் என்பவர்கள் இலங்கை தமிழினத்தின் விடுதலைக்காக எரிந்து இறந்தார் என்பது நாமறிந்ததே. சாதாரண மனிதர்களுக்கும்,மாமனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: பிறர் வாழ தங்களைக் கையளிப்பவர்கள் மாமனிதர்கள். இயேசு இந்த உலக மாந்தர் அனைவரும் வாழ்வுபெற, மீட்படைய தம்மையே கையளிக்க முன் வந்தார். இந்த மீட்பின் நிகழ்வுகளைக் கொண்டாட இருக்கும் நாம், நமது வாழ்வில் பிறர் வாழ நாம் என்ன செய்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.

உரிமைகள் காக்க உயிர்தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம் என்னும் கத்தோலிக்க பாடல் வரியை இங்கு நினைவுகூர்ந்தால் நாம் இன்று உயிராயுதம் ஏந்தி எம் இனத்திற்காக எங்களை தியாகம் செய்தல் வன்முறை என்று வன்மையாக கண்டிக்கும் இந்த மனசாட்சியற்ற,உணர்வற்ற உலகம் என்பது எமக்கு வெளிப்படையாகும். பலருக்காக ஒருவர் துன்பங்களை அனுபவிப்பது நல்லது என்னும் இறைத்திட்டத்தை இயேசு அறிமுகப்படுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து, எத்தனையோ மறைசாட்சியர், புனிதர்கள் இத்திட்டத்தின்படி தம் இன்னுயிரைக் தியாகம் செய்துள்ளனர்.  உணர்வுள்ள உலகம் உருவாகிட எங்கள் உயிரைக் நாம் கொடுக்காவிட்டாலும் பிறர் வாழ்வு பெற, பிறர் விடுதலை அடைய, சிறிய இழப்புகளை ஏற்றுக்கொள்ள முன் வந்தாலே, அது பெரிதான செயலாக இருக்கும். நம்முடைய வாழ்விலும் சின்னச் சின்னச் செயல்பாடுகளில் பலருக்காக  நாம் சிறிய துன்பங்களை, இடர்ப்பாடுகளை, வசதிக் குறைவுகளை ஏற்றுக்கொள்வது என்னும் இயேசுவின் மாதிரியைப் பின்பற்ற முயல்வோமா?



34.    23.03.2013 பிறருக்காக  வாழ இயேசுவின் மாதிரியைப் பின்பற்ற முயல்வோம்?
  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

தலைமைக் குரு கயபா அறிவித்த இந்த வார்த்தைகள்:'இனம் முழுதும் அழிந்துபோவதைவிட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது"என்னும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. கயபா கயமை நிறைந்த உள்ளத்தோடு இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், இதனை எழுதிய நற்செய்தியாளர் அதனையும் இறைவாக்காகவே எடுத்துக்கொள்கிறார். மனித இனத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஓர் இனத்திற்காக உயிர் துறந்த தலைவர்கள் பலரைப் பார்க்கலாம். அண்மையில் கூட இந்தியாவில்  இல. மணி, முத்துக்குமார் என்பவர்கள் இலங்கை தமிழினத்தின் விடுதலைக்காக எரிந்து இறந்தார் என்பது நாமறிந்ததே. அல்லது ஒரு குடும்பத்தைக் காக்க உயிர் துறந்த தனி மனிதர்களையும் சந்திக்கலாம். சாதாரண மனிதர்களுக்கும்,மாமனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: பிறர் வாழ தங்களைக் கையளிப்பவர்கள் மாமனிதர்கள். இயேசு இந்த உலக மாந்தர் அனைவரும் வாழ்வுபெற, மீட்படைய தம்மையே கையளிக்க முன் வந்தார். இந்த மீட்பின் நிகழ்வுகளைக் கொண்டாட இருக்கும் நாம், நமது வாழ்வில் பிறர் வாழ நாம் என்ன செய்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.

உரிமைகள் காக்க உயிர்தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம் என்னும் கத்தோலிக்க பாடல் வரியை இங்கு நினைவுகூர்ந்தால் நாம் இன்று உயிராயுதம் ஏந்தி எம் இனத்திற்காக எங்களை தியாகம் செய்தல் வன்முறை என்று வன்மையாக கண்டிக்கும் இந்த மனசாட்சியற்ற,உணர்வற்ற உலகம் என்பது எமக்கு வெளிப்படையாகும். பலருக்காக ஒருவர் துன்பங்களை அனுபவிப்பது நல்லது என்னும் இறைத்திட்டத்தை இயேசு அறிமுகப்படுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து, எத்தனையோ மறைசாட்சியர், புனிதர்கள் இத்திட்டத்தின்படி தம் இன்னுயிரைக் தியாகம் செய்துள்ளனர்.  உணர்வுள்ள உலகம் உருவாகிட எங்கள் உயிரைக் நாம் கொடுக்காவிட்டாலும் பிறர் வாழ்வு பெற, பிறர் விடுதலை அடைய, சிறிய இழப்புகளை ஏற்றுக்கொள்ள முன் வந்தாலே, அது பெரிதான செயலாக இருக்கும். நம்முடைய வாழ்விலும் சின்னச் சின்னச் செயல்பாடுகளில் பலருக்காக  நாம் சிறிய துன்பங்களை, இடர்ப்பாடுகளை, வசதிக் குறைவுகளை ஏற்றுக்கொள்வது என்னும் இயேசுவின் மாதிரியைப் பின்பற்ற முயல்வோமா?

35.   25.03.2013“”நாங்கள் யார்;. எங்கள் தீர்மானம் என்ன? தேர்ந்து செயல்படுவோம்.    
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மரியா  என்னும் பெண் இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலத்தை இயேசுவின் காலடிகளில் ப+சி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. இயேசுவை காட்டிக்கொடுத்த இயேசுவின் சீடன் யூதாசு இஸ்காரியோத்து இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது இயேசு, "மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார். ஏன்னும் பைபிள் பகுதி எமக்கு இன்று தரப்படுகின்றது. நாம் ஒரு இலட்சியத்திற்காக வாழ்ந்தால் எங்கள் நண்பர், உறவினர், போன்றோராலும்  புறக்கணிக்கப்படுகின்றோம்.  எம்மீது அவதூறு அள்ளி வீசி அவமானப்படுத்தப் படுகின்றோம். பணம் இப்போது அவரிடம் இல்லை. பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. அவருக்குப் பாதுகாப்பில்லை. நண்பர் கூட்டம் ஒடிவிட்டது. மேலிடம் கைவிரித்துவிட்டது. இப்போ எங்களுடைய தீர்மானம் என்ன? இயேசுவின் இத்தகைய அனுபவத்தில் அவரோடு கூட இருந்த சிலரை நம் கண்முன்னிருத்துவோம். மார்த்தா: இயேசுவுக்கு உணவு பரிமாறினார். அவளால் முடிந்த செயவை செய்தாள்;. மரியா: இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம்  இயேசுவின் காலடிகளில் ப+சி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். யூதாஸ்: வாய்ச் சொல்லில் வீரர். கடவுளின் புகழுக்காக நாம் செலவு செய்வதற்குப் பதிலாக ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டாமா என்னும் கேள்வி எழுப்புகிறார். இதற்கு இயேசு தருகின்ற பதில் எமக்கு சமூக நீதிக்காக உழைப்பதும் கடவுள் புகழுக்காகத் எம்மை தியாகம் செய்வதும் இயேசுவின் போதனைப்டி மிக நெருக்கமாக இணைந்தவையாகும் என்பதாகும். கடவுளை நினைந்து மனிதரை மறப்பதோ, மனிதரை நினைந்து கடவுளை மறப்பதோ கிறிஸ்தவின் பார்வையல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கின்ற அதே வேளையில் நாம் கடவுளைப் புகழ்வதையும் நாம் மறந்துவிடலாகாது. நாங்கள் யார்;. எங்கள் தீர்மானம் என்ன? தேர்ந்து செயல்படுவோம்.

36.    26.03.2013; உண்மை எம்மை சரியான பாதையில் வழிநடத்த வழிவிடுவோம்
     ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு உள்ளம் கலங்கியவராய்,'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று இயேசு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இப்பகுதியில், தன்னைக் காட்டிக் கொடுக்கும் சீடர் யார் என்று இயேசு சுட்டிக் காட்டுவதை அறிகிறோம். “என் பகைவன் என்னைக் காட்டிக்  கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் என்னோடு உண்பவன் அல்லவா எனக்கு எதிராகக் எழுந்துள்ளான்” என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்வது இங்கு நாம் நினைத்துப்பார்க்கலாம். நாமும் எம் இருப்பை காத்துக்கொள்ள இந்தப் பச்சைத் துரோகத்தனத்தை பலவழிகளில் செய்கின்றோம்.

சீமோன் பேதுரு இயேசுவிடம், 'ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?" என்று கேட்டார். இயேசு 'நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார். பேதுரு, 'ஆண்டவரே நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, 'எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல்கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார். உண்மையில் வாழ்வதென்பது நமக்குப் பல்வேறு சூழமைவுகளில் முடியாது போகின்றது. பேதுருவுக்கும் இந்நிலைதான் ஏற்பட்டது. இக்கட்டான சூழல் வந்தபோது இயேசுவை மறுதலித்தார். யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்து வாழ்வை இழந்தான். ஆனால் பேதுரு தனது பாதகச் செயலுக்கு மனம் நொந்தழுதார். மறுவாழ்வு பெற்றார். நமது உள்மனது, இந்த உண்மையைச் சொல்லாது விடாதே என்று பல முறை சொல்வதைக் கேட்ட பிறகும்கூட பொய்க்குத் துணையாக நாம் எத்தனை தடவை நின்றிருக்கின்றோம். உண்மை கசக்கும். ஆனால் அதுதான் சரியான பாதையை நெறிப்படுத்தும்.

37.     27.03.2013 உலக இன்பங்களுக்காக மற்றவர்களை காட்டிக்கொடுக்காமல் வாழ்வோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசுவின் பன்னிருபசீடர்களில் ஒருவனாகிய ய+தாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். என்னும் பைபிள் பகுதி எமக்கு இன்று தரப்படுகின்றது. இறைமகன் இயேசு, இந்த மண்ணுலகில் மனிதனாக 33 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையை நிறைவு செய்யும் நாட்கள் நெருங்கிவருகிறது.  எத்தனையோ புதுமைகளையும், தத்துவங்களையும், சமூக சீர்த்திருத்தங்களையும் செய்து மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்தவர் இயேசு. அவர் மனித மனங்களில் மண்டிக் கிடந்த களைகளை நீக்கி மக்களை இறைவழியில் செல்ல வைத்தார்;. பாவ வழிகளை அழிக்கப் பாடுபட்டார். உலக மக்களின் பாவங்களைப் போக்கவே இம்மண்ணுலகில் மனிதனாகப் பிறந்தேன். என் அரசு நிலையானது. அதற்கு அழிவே இல்லை. அன்பு, சமாதானம், சகிப்புத்தன்மை ஆகியனவே மனித வாழ்வின் அத்;திவாரம் என்று போதித்ததுமல்லாமல் வாழ்ந்தும்காட்டியவர். ஆனால் மூர்க்க குணம் கொண்ட யூதர்கள், இயேசுவின் போதனையை ஏற்க மறுத்துவிட்டனர். மூடப்பழக்க வழக்கங்களுக்கு அடிமையான யூதர்களும், பரிசேயர்களும், தலைமைக் குருக்களும் இயேசுவை கொலை செய்யச் சதித் திட்டங்களைத் தீட்டினார்கள்.

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது என்ற இயேசுவின் போதனைகள்; இந்த நிகழ்விலே நிறைவேறுவதைப் பார்க்கிறோம். யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான். பணத்துக்காக இயேசுவையும்,இயேசுவின் மதிப்பீடுகளையும் காட்டிக்கொடுத்து வாழ்பவர்கள் இன்றும்; எம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எப்பொழுதெல்லாம் பணத்தின்மீது அதிகஆசை கொள்கிறோமோ,பணத்துக்காகபாவத்தை,குற்றங்களை,செய்கிறோமோ,அப்பொழுதெல் லாம் நாம்இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம். நாம் இயேசுவை காட்டிக்கொடுத்தாலும், மறுத லித்தாலும், அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை என்றும் தம் குழந்தைகளாகவே வாழ்விக்கின்றார்,வழிநடத்துகின்றார். இயேசுவின் வாழ்வு நம்மிடம் இருக்கிறதா? நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை நம்மிடம் பழகுபவர்களை நாம் எத்தனை முறை இடருக்கள்தள்ளியிருக்கின்றோம் நிந்தனை செய்திருக்கின்றோம்.? மறுதலித்திருக் கின்றோம்.? காட்டிக்கொடுத்திருக்கின்றோம்,தள்ளிவிட்டிருக்கின்றோம்? தவிக்கவிட்டிருக்கிறோம்.? ஒடுக்கியிருக்கின்றோம்? ஒதுக்கியிருக்கின்றோம். பணத்துக்காக, உலக இன்பங்களுக்காக நாங்கள் மற்றவர்களை காட்டிக்கொடுக்கும் அவலநிலையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்வோம்

38.    28.03.2013 மனிதம் மலர முன்மாதிரி காட்டுவோம்
   ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைத்து ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 'நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" என்னும் பைபிள் பகுதி இன்று எமக்க தரப்படுகின்றது. மனிதம் மலரவேண்டும், மானுடம் வாழ வேண்டும் என்பதற்காக. இந்நிகழ்ச்சி மூலம் இயேசு முன் வைக்கும் கருத்து இது. அந்த முன்மாதிரி அன்பின் முதிர்ச்சி. அந்த அன்பின் முதிர்ச்சி நமது வாழ்விலும் மிளிரவேண்டும். கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்த இயேசு அதற்குத் தாழ்ச்சி வேண்டும், பணிவு வேண்டும் என்பதைச் செயல்படுத்திக்காட்ட அன்று சீடர்களின் பாதங்களைக் கழுவி பாடம் கற்பித்தார். இந்நிகழ்வில் இயேசுவின் பகிர்தலையும், பணிவையும்;;, தாழ்ச்சியை, பாசத்தையும் பார்க்கிறோம். எம்மில் எத்தனை பேர் இந்தத் தாழ்ச்சியை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை, நமது ஆளுமையை, பணத்தை, செல்வாக்கை, நன்மதிப்பைக் காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு சீடர்களோடு இறுதிஇராவுணவு வேளையில் தந்தை அனைத்தையும் தம்கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும், தாம் கடவுளிடம் திரும்பச்செல்லவேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். இன்றுநமது குடும்பவாழ்விலே குருத்துவவாழ்விலே ஒப்படைக்கப்பட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க, உயிரோட்டம் கொடுக்க நாம் எடுக்கும் முயற்சி என்ன? காய்க்கும் மரம் தன் கனிகளைத் தானே உண்பதில்லை, ஓடும் ஆறு தன் தண்ணீரைத் தானே பருகுவதில்லை. பூக்கும் செடி தானே தன் மலர்களை அணிவதில்லை இவையெல்லாம் இருப்பது பிறர்க்காகவே. ஆம், இயேசு பிறந்ததும், வாழ்ந்ததும், போதித்ததும், இறந்ததும்,தனக்காக அல்ல, மாறாக மானிதன் வாழ்வு பெறவே. இந்த மீட்புச் செயலின் மொத்த வெளிப்பாடுதான் இன்றைய இராவுணவுக் கொண்டாட்டம்.நாமும் இந்த இராவுணவின் பாடங்களை வாழ்வாக்குவோம்.
39.    29.03.2013 மன்னிப்பை வழங்கும் மாணிக்கங்களாவோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு ஒரு குற்றவாளியைப் போல சிலுவையில் அறையப்பட்டு இறந்தார். சிலர் அவரை அரசியல் குற்றவாளியாக, சமயக் கொள்கைகளை மறுத்த துரோகியாகப் பார்த்தார்கள். நாட்டிற்கும் சமயத்திற்கும் எதிராகச் செயல்படுவோர் சரியான தண்டனை பெறவேண்டும் எனக் கருதியோர் இயேசுவின் சாவு பற்றி அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் நாம் இயேசுவின் வேதனையைக் கொஞ்சமாகிலும் உணர முயல்வோம். உரோமையர்கள் கண்டு பிடித்த சித்திரவதைகளின் கொடுமுடியாக, சிகரமானதுதான்  சிலுவை மரணம். அன்று சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்திரவதைப்பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருப்பதால், உடல் தொங்கிக்கொண்டிருக்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு ஆணிகளால் அறையப்பட்ட கால்களையும், இரு கைகளையும் அவர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்படி அவர்கள் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரணவேதனை அனுபவிப்பார்கள். ஒரு சிலர் இப்படி உயிரோடு போராடி எழுப்பும் மரணஓலம் எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த மரணஓலத்தை நிறுத்தவே, அவர்கள் மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காகவே அவர்கள் மீண்டும் மேலே எழுந்துவர முடியாதபடி அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளிவரும். தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த மற்றவர்களை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகளின் முதல் வரிகள் இவை: தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை. தன் இறுதி மூச்சுவரை இயேசு மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல், கோடிக்கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். மனித வரலாற்றில் புனிதர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் மன்னிப்பிற்கு அற்புதமான சாட்சி பகர்ந்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரில் நாட்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பல ஆயிரம். நாட்சி வதை முகாமின் சுவற்றில் அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்கவேண்டும் என நம்பப்படும் வரிகள் இவை. “இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம். இவைகளையும் நினைவு கூர்ந்தருளும். நாங்களும், அவர்களும் இறுதித் தீர்வைக்கு வரும்போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல்வாழ்வைத் தந்தருளும்.” நாம் மன்னிப்பை வழங்கவும், மன்னிப்பைப் பெறவும் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டால் இந்த மண்ணகம் விண்ணகமாகும். நம் வாழ்வில் மன்னிப்பைத் தந்த நேரங்கள், பெற்ற நேரங்கள் அப்போது நாம் அடைந்த அந்த நிம்மதி, நிறைவு இவற்றைச் இயேசுவின் கல்லறை முன்பு நினைவுபடுத்தி பார்ப்போம்.

40.    30.03.2013“”இயேசுவின் கல்லறை நமக்கு மன்னிப்பின் பாடத்தை சொல்லித்தரட்டும்.
    ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
சனிக்கிழமை, அதாவது அன்று ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், ஐயா, இயேசு உயிருடன் இருந்தபொழுது மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு,இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

காவல் பலமாக இருந்ததனால் கல்லறையை நெருங்க முடியாமல் அன்னை மரியா, மகதலா மரியா, அன்புச் சீடர்கள் தவித்தனர், அந்தக் கல்லறையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் அன்னை மரியா, சீடர்கள் அனைவரின் உள்ளங்களிலும் அலைமோதும் எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? எத்தனையோ எண்ணங்கள் இருந்தாலும், இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன பொன்மொழிகள் அவர்கள் எண்ணங்களை ஆக்கிரமித்திருக்கும். அவர்களுடன் நாமும் இணைந்து, இயேசுவின் இறுதி பொன்மொழிளில்: தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என கூறும் பகுதியை சிந்திப்போம். தன் உலக வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தன் சொல்லாலும் செயலாலும் இறைமகன் இயேசு மன்னிப்பின் உன்னதத்தை உணர்த்தியதை இங்கு சிந்திப்போம். மன்னிப்பு மழையில் இந்தஉலகம் நனைந்தால்,சுவாசிப்பதைப் போல் மன்னிப்பதும் நம்  ஒவ்வொருவருக்கும்  இயல்பாகவே மாறிவிட்டால். இயேசுவின் வேதனையின் உச்சியில் சிலுவையில் அவர் கூறிய  அற்புதமான இந்த வார்த்தைகளை, அழகான வாழ்க்கைப் பாடங்களைச் எமக்கு செல்லிதந்து விட்டதே என நாம் மார்பு தட்டி மகிழலாம். இயேசுவின் கல்லறை நமக்கு மன்னிப்பின் பாடத்தை சொல்லித்தரடடும்.
 

Tuesday, September 18, 2012

திருத்தந்தையின் ஆசிர்வாதம் செய்த அற்புதம்

சிறுமி சிட்னியில் உயிர்தப்பியது


திருத்தந்தை 16ம் பெனடிக் 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியவிற்கு உலக இளையோர் நாளைக் கொண்டாச் சென்றிருந்தார். அப்போது சிட்னி; மாநகரில் பிறந்து ஒரு சில மாதங்களே ஆன
Claire Hill என்னும் பெண் குழந்தையை கையிலேந்தி ஆசீர்வதித்தார்.

அதே பெண்குழந்தை கடந்த 15.2.2011 அன்று ஒரு பாரிய விபத்திலிருந்து அற்புதமான வகையில் காப்பற்றப்பட்டுள்ளார் என்று 18.2.2011 அன்று
Sydney Morning Herald  என்னும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மூன்று வயதாகும்
Claire Hill  வின் தந்தை Peter Hill ஒருMini Bus   சாரதியாவார். அவர் கடந்த 15.2.2011 அன்று ஒரு வாயு நிரப்பு  நிலையத்திற்கு மகள்  Claire Hill ளை எற்றிக்கொண்டு தன் 22 ஆசனங்கள் கொண்ட சிற்றுந்தில் சென்றுள்ளார். அங்கு வரிiயில் நிறுத்திநின்ற வேளை சிறுமி  சிற்றுந்தின் பின்புறமாக சென்றுள்ளதை தந்தை அறிந்து கொள்ளவில்லை.    Peter Hill  தன் சிற்றுந்தை பின்புறமாய் எடுக்கும் வேளையில் அவரது மகள் Claire Hill வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். சிற்றுந்து சிறுமியின் வயிற்றுப் பகுதியால் முற்றிலுமாக ஏறி இறங்கியது.

நடந்ததை உணர்ந்த 
Peter Hill வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்தார். கடவுளே என் மகளைத் நானே கொன்றுவிட்டேன் என்று அவர் நினைத்தார்;. ஆனால், சிறுமி Claire Hill எந்த வித ஆபத்தும் இல்லாமல் அற்புதமாக காப்பற்றப்பட்டதை அறிந்தார். வாகனத்தின் சக்கர  பதிவுகள் சிறுமியின் சிறிய வயிற்றுப் பகுதியில் பதிந்துள்ளதை நன்கு காணகூடியதாக உள்ளது ஆயினும் எலும்புகள், உள் உறுப்புக்கள் எதுவும் சேதமடைய வில்லை. சுpட்னியின் மருத்துவர்கள் சில சிறிய காயங்களுக்கம் வெளிப்புறக் உராய்வுகளுக்கும் சிறுமி Claire Hill மருத்துவம் செய்தனர். இவர்கள் பாரிய காயங்கள் எதுவுமின்றி சிறுமி எவ்வாறு  காப்பாற்றப்பட்டார் என் பதுலுரைக்க முடியாது மெனமாக சென்றனர். ஆயினும் இது ஒரு பெரிய புதுமையே என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.Claire Hill இன் தந்தை Peter Hill இ தாய் Sue Hill லும் தமது குழந்தை காப்பற்றப்பட்டமை ஆனது திருத்தந்தை 16ம் பெனடிக் 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா வந்தபோது எமது குழந்தையை கையிலேந்தி ஆசீர்வதித்தமையாலேயே நடைபெற்ற புதுமை என நம்பிக்கை வெளியுட்டுள்ளனர். காவல் சம்மனசானவரே சிற்றுந்தை தாங்கி அதன் பாரத்தை குழந்தைமீது படவிடாமல் பாந்திருந்தார் என்று தந்தை Peter Hillஆணித்தரமாக கூறினார்

தாய்
Sue Hill தெரிவிக்கையில் விபத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அவர் சிறுமிக்கு மரியன்னையின் பதக்கம் ஒன்றை தன் குழந்தைக்கு அணிவித்ததாகவும், தங்கள் குழந்தை செபத்தினாலேயே காப்பாற்றப்பட்டாள் என்றும் கூறினார்.